பிளஸ் 2 பொதுத் தேர்வு தள்ளிவைப்பா?- கல்வி அதிகாரிகள் விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 06, 2021

Comments:0

பிளஸ் 2 பொதுத் தேர்வு தள்ளிவைப்பா?- கல்வி அதிகாரிகள் விளக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வை தள்ளிவைப்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3 முதல் 21-ம் தேதி வரை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில், திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் பெற்றோர் மத்தியில்எழுந்துள்ளது. தேர்வை தள்ளிவைப்பது தொடர்பாக கல்வித்துறை பரிசீலனை செய்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் தீரஜ் குமார், ஆணையர் வெங்கடேஷ், இயக்குநர் கண்ணப்பன் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதுகுறித்து கேட்டபோது, பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மாணவர்கள் உயர்கல்விக்கு பிளஸ் 2 மதிப்பெண் அவசியம். அதனால் பொதுத் தேர்வை நடத்துவதற்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதேநேரம், நோய் பரவல் அதிகரிப்பதுஅச்சுறுத்தலாகவும், சவாலாகவும் உள்ளது. இதனால்தேர்வை பாதுகாப்பாக நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். தேர்வு மையங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது உட்பட அம்சங்களே விவாதிக்கப்பட்டன. நோய் பரவலின் தீவிரம் குறித்து சுகாதாரத் துறையிடம் அறிக்கை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்த பிறகு முடிவு எடுக்கப்படும். எனினும், பொதுத் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews