தஞ்சாவூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் கடிதத்தின் படி , எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 ஐ முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் பயிற்சி வகுப்பு 13.03.2021 அன்று நடைபெற்றது. அப்பயிற்சி வகுப்பில் இணைப்பில் காணும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தும் பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தேர்தல் பணி ஆணை பெற்ற அனைவரும் எதிர்வரும் தேர்தல் பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது. எனவே மேற்படி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் 26.03.2021 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் தேர்தல் பணியினை தொடர்ந்து புறக்கணிக்க நேரிடின் அவ்வலுவலர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 ஐ மீறியதாக கருதப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும் என தஞ்சாவூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டுள்ளது , எனவே 13.03.2021 அன்று பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத பட்டியலில் காணும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களிடம் இணைப்பில் காணும் உறுதிமொழிப் படிவத்தினைப் பூர்த்தி செய்து 23.03.2021 அன்று மாலைக்குள் பெற்று தொகுப்பறிக்கையினை இவ்வலுவலகத்தில் ஒப்படைத்திட மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
பள்ளிக்கல்வித்துறை சார்பாக இப்பணியினை மாவட்டக்கல்வி மாவட்டக்கல்வி , அலுவலகத்திலும் , தொடக்கக்கல்வித்துறை சார்பாக இப்பணியினை வட்டாரக்கல்வி அலுவலகத்திலும் மேற்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Search This Blog
Wednesday, March 24, 2021
Comments:0
Home
CEO/DEO/SPD
ELECTION
NEWS
PROCEEDINGS
தேர்தல் நடத்தும் பணியாளர்களின் தேவை அதிகரிப்பு - மாவட்ட தேர்தல் அலுவலர்.
தேர்தல் நடத்தும் பணியாளர்களின் தேவை அதிகரிப்பு - மாவட்ட தேர்தல் அலுவலர்.
Tags
# CEO/DEO/SPD
# ELECTION
# NEWS
# PROCEEDINGS
PROCEEDINGS
Labels:
CEO/DEO/SPD,
ELECTION,
NEWS,
PROCEEDINGS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.