Breaking

Wednesday, March 10, 2021

அரசு பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுப்பு?

அரசு பள்ளிகளில், சனிக்கிழமைகளில் வகுப்புகளை ரத்து செய்ய, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தாக்கத்தால், பள்ளிகள் திறக்கப்படாமல், 'ஆன்லைன்' வழி வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டன. 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, ஒரு மாதத்துக்கு முன் பள்ளிகள் திறக்கப்பட்டன.
ஒரு நபர் குழு பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய வீதங்கள் அடங்கிய அரசாணைகள் வெளியீடு!
புதிய கல்வி ஆண்டில், ஏழு மாதங்கள் வரை பள்ளிகள் செயல்படாததால், பள்ளிகள் திறக்கப்பட்டதும், வாரத்தின் ஆறு நாட்களும் வகுப்புகளை நடத்த, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. பல மாதங்களாக ஓய்வு எடுத்து விட்டு, திடீரென ஆறு நாட்களும் வேலை செய்வதில், ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால், சனிக்கிழமை மட்டும் விடுப்பு அளிக்கும்படி கோரி வந்தனர்.வரும் வாரங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதால், இந்த பயிற்சிகளில் பங்கேற்பதற்காக, சனிக்கிழமை விடுமுறை வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க கோரிக்கை
இது குறித்து, பள்ளிக் கல்வி அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். விரைவில் சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பு வரலாம் என, கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog