ஓட்டுச்சாவடி அமையும் பள்ளிகள் ஏப்.,1ல் தயாராக வைக்க அறிவுரை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 17, 2021

Comments:0

ஓட்டுச்சாவடி அமையும் பள்ளிகள் ஏப்.,1ல் தயாராக வைக்க அறிவுரை

ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்படும் பள்ளி, கல்லுாரிகளை, ஏப்., 1க்குள் தயார் நிலையில் வைத்திருக்க, பள்ளி மற்றும் கல்லுாரி கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி மாணவர்களின் வாசித்தல், திறன் மேம்படுத்த கருத்தாளர்களுக்கு பயிற்சி முகாம்
தமிழகம் முழுதும் சட்டசபை தேர்தல், ஏப்., 6ல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. பள்ளி, கல்லுாரிகள் மற்றும் அரசு துறை கட்டட வளாகங்களில், ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.அங்கு, ஓட்டுப்பதிவுக்கு மூன்று நாட்களுக்கு முன், ஓட்டு சாவடி அமைத்தல், பொதுமக்களுக்கான வழிகாட்டு முறைகளை ஏற்படுத்துதல், மாற்று திறனாளிகளுக்கு பாதை அமைத்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஓட்டு சாவடிகளில் மாதிரி ஓட்டு பதிவு நடத்தி, தேர்தல் பணியாளர்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் நடத்தப்படுவதால், அவற்றை தேர்தல் அலுவலர்கள் இன்னும் தங்கள் கட்டுப் பாட்டில் எடுக்கவில்லை.அதேநேரம், பள்ளிக்கல்வி மற்றும் கல்லுாரி கல்வி அலுவலர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் வழியே, தகவல்கள் பரிமாறப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media-Bulletin - 17.03.2021 - PDF
ஓட்டுப்பதிவுக்கு, சில நாட்கள் முன்பே, அதற்கான முன் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதால், ஓட்டு சாவடி அமையும், பள்ளி, கல்லுாரிகளை தேர்தல் அலுவலர்கள், ஏப்., 1ல் தங்கள் வசம் எடுக்க வாய்ப்புள்ளது.அதற்கு முன், கற்பித்தல் பணிகளை முடித்து, பள்ளி, கல்லுாரி வளாகங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews