வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்கள் 1,2,3,4 ஆகியோர்களுக்கான முதல்கட்ட பயிற்சி கையேடு - TN Assembly Election 2021 - POs And Polling Officers First Training Guide - PDF
வட்டார கல்வி அதிகாரிகள் அலுவலகத்தில் அமர்ந்து நேரத்தை வீணாக்காமல் பள்ளிகளுக்கு சென்று பார்வையிட வேண்டும் என்று கர்நாடக மாநில பொதுகல்வி இயக்குனரக ஆணையர் வி.அன்புகுமார் உத்தரவிட்டார்.கோலார் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் கல்வி பரிசீலனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, உதவி முதன்மை கல்வி அதிகாரி, 6 தாலுகாக்களின் வட்டார கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அதிகாரியிடமும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு மானியம் பெறும் பள்ளிகளின் விவரங்களை கேட்டு பெற்றார். அதேபோல் கடந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறித்தும் விவரம் பெற்றார். அதை தொடர்ந்து அவர் பேசும்போது, கோலார் மாவட்டத்தில் 1,236 பள்ளிகள் உள்ளது.
TN Assembly Election 2021 - Zonal Guide - PDF
இதில் பள்ளியின் தரம் ஏபிசிடி என்று பிரிக்கப்பட்டுள்ளது. ஏ மற்றும் பி பிரிவில் உள்ள பள்ளிகள் சிறப்பாக இயங்கும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஏ பிரிவில் 420, பி பிரிவில் 676 பள்ளிகள் உள்ளது. மற்ற பள்ளிகள் சி மற்றும் டி பிரிவில் உள்ளது. கடந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் மாநிலத்தில் 5வது இடத்தில் கோலார் மாவட்டம் இருந்தது. நடப்பு கல்வியாண்டில் இதை முதலிடத்திற்கு கொண்டுவர வேண்டும். எந்தெந்த பள்ளிகளில்அடிப்படை வசதிகள் குறைவாக இருக்கும் பட்சத்தில் அரசின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். வட்டார கல்வி அதிகாரிகள் தங்கள் அலுவலத்தில் அமர்ந்து நேரத்தை வீணாக்காமல் தினமும் ஒரு பள்ளிக்காவது சென்று பரிசீலனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்’’.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.