வாக்காளர் அட்டை பதிவிறக்கம் செய்ய வசதி...இன்றே கடைசி: ஓட்டுச்சாவடியில் தயார் நிலையில் அதிகாரிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 14, 2021

1 Comments

வாக்காளர் அட்டை பதிவிறக்கம் செய்ய வசதி...இன்றே கடைசி: ஓட்டுச்சாவடியில் தயார் நிலையில் அதிகாரிகள்

மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய, 'ஆன்லைன்' பயன்பாடு தெரியாதவர்களுக்காக நடத்தப்படும் முகாம், இன்றுடன் நிறைவடைகிறது. இன்று கடைசி நாள் என்பதால், முதன்முறை வாக்காளர்களுக்கு உதவ, ஓட்டுச்சாவடிகளில், அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். மின்னணு வாக்காளர் அட்டை பதிவிறக்கம் செய்ய விரும்புவோர், மொபைல் போனுடன் செல்வது அவசியம்.
General Election to the Legislative Assemblies of Assam, Kerala, Tamil Nadu, West Bengal and Puducherry, 2021 - Equitable opportunity to have access to advertisement spaces for election related advertisement
தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி முடித்து, ஜன., 20ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்காக, ஒரு மாதம் நடந்த சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி, 21 லட்சத்து, 82 ஆயிரத்து, 120 பேர், விண்ணப்பித்தனர்.இதில், 21 லட்சத்து, 39 ஆயிரத்து, 395 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, அவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டன. நடவடிக்கை
புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய, வாக்காளர் அடையாள அட்டை தயார் செய்யப்பட்டு, விரைவு தபாலில் அனுப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், வாக்காளர் பட்டியலில், முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள், மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை, voterportal.eci.gov.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டது.
தேர்தல் பணிக்கான அலுவலர்கள் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில் PO-1 விரலில் மை வைக்கும் பணியையும், PO-2 Control Unit பணியையும் கூடுதலாக பார்க்க வேண்டியது குறித்த தேர்தல் ஆணையத்தின் கடித நகல் - PDF
பதிவிறக்கம் செய்ய, ஆன்லைன் பயன்பாடு தெரியாதவர்களுக்காக, 30 ஆயிரத்து, 400 இடங்களில் அமைந்துள்ள ஓட்டுச்சாவடிகளில், இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.அதன்படி, நேற்று முகாம் துவங்கியது. முகாமில் ஏராளமானோர் பங்கேற்று, மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை, தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொண்டனர். இம்முகாம், இன்று மாலை, 3:00 மணியுடன் நிறைவடைகிறது. General Election to the Legislative Assemblies of Assam, Kerala, Tamil Nadu, West Bengal and Puducherry, 2021 - Equitable opportunity to have access to advertisement spaces for election related advertisement
'பிரின்ட் அவுட்'
வாக்காளர் பட்டியலில், முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள், இந்த முகாமை பயன்படுத்தி, மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை, தங்கள் மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.பதிவிறக்கம் செய்த மின்னணு வாக்காளர் அட்டையை, 'பிரின்ட் அவுட்' எடுத்து, ஓட்டு போட பயன்படுத்தலாம் என்பதால், புதிய வாக்காளர்கள் எல்லாரும், இந்த வாய்ப்பை தவற விடக் கூடாது என்றும், அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews