'இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள், வரும் 31ம் தேதிக்குள் விடுதிகளை காலி செய்ய வேண்டும்' என, அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க, பள்ளி, கல்லுாரிகளுக்கு மீண்டும், தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. நேரடி வகுப்புகளை ரத்து செய்து, இனி, 'ஆன்லைன்' வகுப்புகளை மட்டும் நடத்துமாறும், தேர்வுகளையும் ஆன்லைன் வழியே நடத்துமாறும், தமிழக அரசு அறிவித்து உள்ளது.அண்ணா பல்கலையின் இன்ஜி., கல்லுாரிகளில், வரும் 31ம் தேதிக்குள் செய்முறை பயிற்சி வகுப்புகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, அண்ணா பல்கலையின் வளாக கல்லுாரிகளில் உள்ள மாணவர் விடுதிகளை, வரும் 31ம் தேதிக்குள் காலி செய்யுமாறு, மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு மாணவர்களும், விடுதிகளை காலி செய்ய வேண்டும் என, அதில் கூறப்பட்டுள்ளது.
Friday, March 26, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.