ஜூலை முதல் கல்வி ஆண்டை தொடங்க ஆலோசனை: இம்மாநில அமைச்சர் தகவல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 18, 2021

Comments:0

ஜூலை முதல் கல்வி ஆண்டை தொடங்க ஆலோசனை: இம்மாநில அமைச்சர் தகவல்!

பெங்களூரு: ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டுக்கான கல்வி ஆண்டை தொடங்க மாநில அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என்று அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார். துமகூரு சித்தகங்க கல்வி அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் சுரேஷ்குமார் பேசியதாவது: ``மாநில அரசு மாணவர்களின் நலன், கல்வி ஆண்டை கவனத்தில் வைத்து வரும் கல்வி ஆண்டை ஜூலையிலிருந்து ஆரம்பிக்க ஆலோசனை நடத்தியுள்ளது.
தாய்மொழியில் பொறியியல் படிக்க தமிழ் உட்பட 8 மொழியில் புத்தகம் தயார்
கடந்த ஆண்டு அனைத்து வகுப்புகளில் முடிந்த அளவுக்கு பாடங்கள் நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை ஆன்லைன் வகுப்புகள் அதிகமாக நடத்தி வருவதால் கடந்த ஆண்டு ஒரு மாதிரியான சவாலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த ஆண்டு மற்றொரு மாதிரியான சவால் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் எந்த மாதிரியான சவாலாக இருந்தாலும் மாணவர்களின் நலன், எதிர் காலத்தை கருத்தில் கொண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். கோவிட்-19 இரண்டாம் கட்ட அலை ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது இதனால் மாணவர்களின் நலன், எதிர்காலத்தை கவனத்தில் வைத்து சுகாதார துறையின் ஆலோசனைப்படி நடந்துக்கொள்ளப்படும். அதே போல் வகுப்புகள் விஷயத்திலும் சுகாதாரத்துறையுடன் ஆலோசனை நடத்தாமல் எந்த முடிவும் எடுக்கப்படாது. கொரோனா பாதிப்பு நேரத்தில் மாநில அரசின் கட்டுப்பாடுகளை பள்ளிக்கூடங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கல்வி துறை ஆணையர் மூலமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு சுற்றரிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தற்போது 6-12-ம் வகுப்புகள் வரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாக்குறுதிகள் அதிகம்: ஆசிரியா்களின் ஆதரவு யாருக்கு?
1-5 வகுப்புகள் ஆரம்பிக்கவில்லை. ஆனால் செந்தனவாகினி, ஆகாஷவாணி, ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு பாடபுத்தகம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. 1-5 வரையிலான வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளது ஆனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த வகுப்புகள் ஆரம்பிப்பது குறித்து ஆலோசனை நடத்தவில்லை’’ என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews