Breaking

Monday, February 15, 2021

வருமான வரி தாக்கல் இன்றே கடைசி நாள்... தவறினால் அபராதம்?

கணக்குத் தணிக்கை தேவைப்படும் கணக்குகளுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் ஆகும். தவறுவோருக்கு அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது.

அரசு ஊழியர்கள் வேலைக்கு வர உத்தரவு: பணியாளர்கள் அமைச்சகம் அதிரடி

ஒவ்வொரு நிதியாண்டிலும் மாத ஊதியம் பெறுவோர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூலை 31ம் தேதி நிறைவடையும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக 2019-2020 நிதியாண்டில், வருமான வரித் தாக்கல் செய்வதற்கான அவகசாம் அடுத்தடுத்து நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. இறுதியாக தனி நபர்களுக்கு ஜனவரி 10ம் தேதி வரை கெடு அளிக்கப்பட்டது. கணக்குத் தணிக்கையாளர்கள் மூலம் தணிக்கை செய்யப்படும் கணக்குகளுக்கு பிப்ரவரி 15-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அவகாசத்தை மேலும் நீட்டிக்க எழுந்த கோரிக்கைகளை நிராகரித்த மத்திய நிதியமைச்சகம், கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என தெரிவித்தது.

8-ஆம் வகுப்புக்கு NMMS தோ்வு: இன்று நுழைவுச்சீட்டு வெளியீடு - Direct Link Click Here

அதன்படி, கடைசி நாளான இன்று வருமான வரி தாக்கல் செய்ய தவறுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஜனவரி 10-ம் தேதி வரை 2019-20ஆம் நிதியாண்டிற்கு, 4 கோடியே 95 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.. இது கடந்த நிதியாண்டோடு ஒப்பிடும்போது 5 சதவிகிதம் அதிகம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog