திருப்பூர் முதலிபாளையம், மங்கலம் பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளி, துவக்க விழாவில் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் , செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்தபேட்டி : கடன் தள்ளுபடி போன்ற விஷயங்கள் விவசாயிகள் நலன் கருதி, இது போன்ற அறிவிப்பு என்பது தேர்தல் நேரங்களில் மட்டும் தான் அறிவிப்பது வழக்கம். ஆனால் சட்டசபையிலேயே முதல்வர் அறிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு என்பது இந்தியாவே வியந்த ஒன்றாகும்.
வறட்சி நிலங்களில் குடிமராமத்து பணிகள் , அத்திக்கடவு அவிநாசி போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிகள் நடைபெற வேண்டும். மாணவர்களின் கல்வி சிறக்க வேண்டும். விருப்பப்பட்ட மாணவர்கள் வரலாம் என்று கூறியுள்ளதால் அச்சம் தேவையில்லை' என்றார்.
Search This Blog
Saturday, February 06, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.