'அரசு ஊழியர்களுக்கு, 20 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டம் ஜூனில் முடிகிறது. அதன்பின், மேம்படுத்தப்பட்ட சலுகைகளுடன், காப்பீடு திட்டம் நீட்டிக்கப்படும். காப்பீட்டு தொகை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு, 10 லட்சம் ரூபாயாகவும், அரிய வகை நோய்கள் மற்றும் அசாதாரண நிகழ்வுகளுக்கு, 20 லட்சம் ரூபாய் வரையிலும் காப்பீடு வழங்கும் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும்.
பணமில்லா சிகிச்சை நடைமுறைகள் ஒருங்கிணைக்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டு உள்ளது.
இளைஞர் நலன்
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கான, சிறப்பு கூறுகள் திட்டத்துக்கு, 14 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது *இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்கு, 229.37 கோடி ரூபாய்; ஆதி திராவிடர் சிறப்பு கூறுகள் திட்டத்துக்கு, 13 ஆயிரத்து, 967.58 கோடி ரூபாய்; பழங்குடியினர் துணை திட்டத்துக்கு, 1,276.24 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது * மாற்றுத்திறனாளிகள்நலத் துறையின் பணிகளுக்காக, 688.48 கோடி ரூபாய் நிதி, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.