Breaking

Wednesday, February 10, 2021

வரும் 12ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

சென்னையில் வரும் 12ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என்று வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வரும் 12ம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

தமிழகத்தில் மிகப்பெரிய தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட வாரியாக விரிவான தகவல்களுடன் இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் 30 வயதிற்கு உட்பட்ட 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமா, கலை, அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) கல்வித்தகுதி உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். முகாமில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழகத்தில் மிகப்பெரிய தனியார் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட வாரியாக விரிவான தகவல்களுடன்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog