மார்ச் 1 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்க அனுமதி - உத்தரகாண்ட் மாநில அரசு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 24, 2021

Comments:0

மார்ச் 1 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்க அனுமதி - உத்தரகாண்ட் மாநில அரசு உத்தரவு

Capture
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் மார்ச் 1ம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என்று மாநில அரசு அனுமதியளித்துள்ளது. பள்ளிகள்திறப்பு:
கொரோனா அச்சத்தின் காரணமாக கடந்த மார்ச் 2020 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் காரணத்தால் உயர் வகுப்புகளுக்கு மட்டும் முன்னதாக பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் அனுமதியளித்தது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புக்ளுக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. .com/blogger_img_proxy/பட்டப்படிப்பை மட்டும் தமிழ் வழியில் படித்தால் தமிழக அரசுப்பணியில் இட ஒதுக்கீடு இல்லை - உயர் நீதிமன்றம் தீர்ப்பு மேலும், 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாநில அரசு நோய்த்தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக கடைபிடிக்க பள்ளிகளை அறிவுறுத்தியது. இந்நிலையில் கல்லூரிகள் திறப்பு குறித்து உத்தரகண்ட் மாநில அரசு நேற்று வரை தகவல் ஏதும் தெரிவிக்காமல் இருந்தது.
.com/blogger_img_proxy/ பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால் பாடங்களை விரைவில் முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
கல்லூரிகள் திறப்பு:
இன்று உத்தரகண்ட் மாநில கல்வித்துறை, கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் திறப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 1ம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், இதுவரை மாணவர்களுக்கான பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews