Breaking

Friday, February 05, 2021

தமிழகத்தில் கல்வி நிலையங்கள் உள்பட 69% இடஒதுக்கீடு முறைக்கு எதிரான வழக்குகளை வேறு வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு - தமிழக அரசு பதில் மனு

தமிழகத்தில் கல்வி நிலையங்கள் உள்பட 69% இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்கும் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அரசியல் சாசன பாதுகாப்பு முறைப்படி தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான தனி ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் குடியரசு தலைவர் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்துவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா இடஒதுக்கீட்டிற்கும், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை, ஆகையால் ஒன்றாக விசாரிப்பதற்கான முகாந்திரம் இல்லை என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான வழக்குகளை வேறு எந்த வழக்குடனும் சேர்த்து விசாரிக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்தியாவிலேயே 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவது தமிழகத்தில் மட்டும் தான் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு எதிராக பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கின்றன.பல்வேறு மாநிலங்களில் இருந்து தொடரப்பட்டிருக்கின்றன. அந்த வழக்குகளுடன் சேர்த்து தமிழகத்தில் இருந்து தொடரப்பட்டிருக்கின்ற இந்த வழக்கையும் விசாரிக்க கூடாது என்பது தான் தமிழக அரசின் பதில் மனுவாக இருக்கிறது. ஏனென்றால் தமிழகத்தை பொறுத்தவரையில் சாதிவாரியான கணக்கெடுப்பு என்பது தமிழகத்தில் மட்டுமே உள்ளது. அதன் அடிப்படையில் இந்த 69% சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 69% இடஒதுக்கீட்டிற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மராத்தா இடஒதுக்கீட்டிற்கு இதுபோன்ற ஒரு ஒப்புதல் வழங்கப்படவில்லை. எனவே மராத்தா இடஒதுக்கீட்டிற்கும் தமிழக 69% இடஒதுக்கீட்டிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதனால் மராத்தா இட ஒதுக்கீடு வழக்கோடு தமிழகத்தினுடைய 69% இட ஒதுக்கீடு வழக்கை இணைத்து விசாரிக்க கூடாது என்று தான் தமிழக அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மராத்தா வழக்கையும் தமிழகத்தில் இருந்து தொடரப்பட்டிருக்கின்ற 69% இட ஒதுக்கீட்டு வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதுபோன்ற ஒரு நடவடிக்கையை எடுக்க கூடாது என்றுதான் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனுவை தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசினுடைய இந்த பதில்மனுவை உச்சநீதிமன்றம் ஏற்று கொண்டு 69% இட ஒதுக்கீடு தனியாக உச்சநீதிமன்றம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மராத்தா இட ஒதுக்கீடு வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வே 69% இட ஒதுக்கீடுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog