அண்ணா பல்கலையில் நிறுத்தப்பட்ட, இரண்டு எம்.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, ஒரு மாதத்திற்குள் நடப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:அண்ணா பல்கலையில், எம்.டெக்., படிப்பில், இரு பிரிவுகள், மத்திய அரசின் கல்வி உதவித்தொகையுடன் நடத்தப்பட்டு வந்தன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு முறையை கடைப்பிடிப்பதா அல்லது மாநில அரசின் முறையை கடைப்பிடிப்பதா என்பது, தொடர்பான சர்ச்சை எழுந்தது.
அதைத் தொடர்ந்து, அந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, அண்ணா பல்கலை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசின்,69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி, மாணவர் சேர்க்கை நடத்த, அண்ணா பல்கலை ஒப்புக்கொண்டது.
உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகளின்படி, இரு எம்.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, கடந்த டிச., 31க்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அண்ணா பல்கலையின் தவறான அணுகுமுறையால், மாணவர் சேர்க்கை நடக்கவில்லை.இந்நிலையில், உயர் நீதி மன்ற ஆலோசனைப்படி, சென்னை அண்ணா பல்கலை, உச்ச நீதிமன்றத்தை அணுகி, கூடுதல் அவகாசம் பெற்று, மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
தமிழக அரசே உச்ச நீதிமன்றத்தை அணுகி, கூடுதல் அவகாசம் பெற்று, மாணவர் சேர்க்கை, ஒரு மாதத்திற்குள் நடப்பதை, உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.
Sunday, February 14, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.