"சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க கோரி மீண்டும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு...! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 10, 2021

1 Comments

"சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க கோரி மீண்டும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு...!

மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க கோரி மீண்டும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு...!

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணம் பெறுவதை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்தல் - விடுப்பு விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு - PDF *01.06.2009க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநிலத்தில் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கூட 11 ஆண்டுகளாக வழங்கப்படாததை கண்டித்து 2016 மற்றும் 2018 ல் இரண்டு முறையும் உச்சகட்டமாக உயிர்துறக்கும் உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது அரசு மூன்று முறை எழுத்துப்பூர்வமான உத்தரவாத கடிதம் அளித்தது. ஆனால் அரசு இன்று வரை அதனை நிறைவேற்றாமல் காலதாமதம் செய்து வருகிறது. டிசம்பர்-2018 போராட்டத்தின் போது திரு. சித்திக் அவர்களின் தலைமையிலான ஒரு நபர் கமிட்டியில் "இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகள் சரி செய்யப்படும் ; அவ்வாறு இல்லையெனில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக மேல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஒருநபர் ஊதிய குழுவின் அறிக்கையை 05.01.2019 அன்று மாண்புமிகு முதலமைச்சரிடம் தாக்கல் செய்து இரண்டு ஆண்டுகள் தாண்டியும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஒரு நபர் ஊதியக் குழுவின் அறிக்கையை வெளியிட்டு 2009க்கு பின்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை "சம வேலைக்கு" "சம ஊதியமாக" உடனடியாக வழங்கிட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையோடு மாணவர்களின் கல்வி நலன் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதால் விடுமுறை நாளில் _சென்னை காயிதேமில்லத் கல்லூரி அருகில் வரும் 21.02.2021 அன்று ஒரு நாள்_ அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணம் பெறுவதை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்தல் - விடுப்பு விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு - PDF *அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் எழுத்துப்பூர்வமாக கொடுத்த உத்தரவாதத்தினை நிறைவேற்றும் விதமாக 2009 க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை "சமவேலைக்கு "சம ஊதியத்தினை" ஒரு நபர் கமிட்டியின் அறிக்கையில் வெளியீட்டு ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும்.* *ஒன்று பட்ட போராட்டம் வென்று காட்டும் நிச்சயம்..!* *வெற்றி என்பது எளிதல்ல...!* *அதை விட்டுவிடும் எண்ணமும் ஒருநாளும் எங்களுக்கு இல்ல...!!* *தகவல் பகிர்வு....* *மாநில தலைமை,* *2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு

1 comment:

  1. TNPTF போராட்டம் அறிவித்தால் அப்போதுதான் புத்துயிர் வருகிறதோ அல்லது இடையூறு நோக்கமா?

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews