எஸ்.ஐ., பணிக்கு நேர்முகத்தேர்வு
தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப்ரவரி 28ம் தேதி நடக்க உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகா அறிவித்துள்ளர். தமிழக அரசு:
தமிழக அரசு மாநிலத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உண்டாக்கி கொடுக்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நிர்வகிக்கிறது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தருமபுரியில் நடக்க உள்ள வேலைவாய்ப்பு முகாம் குறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
26 ஹெச்.எம்.,களுக்கு டி.இ.ஓ., பதவி உயர்வு
தருமபுரி முகாம்:
தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வரும் 28ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் அரசு கலை கல்லூரியில் நடத்துகிறது. இது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 8 முதல் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு, தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு, ஐடிஐ, தொழிற்கல்வி பெற்றவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் கற்றவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்.
முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்களும், விண்ணப்பதாரர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அனுமதி இலவசம். முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு போன்ற வழிகாட்டுதல்கள் நடக்க உள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.