1500 வங்கி அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.11.2024 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 08, 2024

Comments:0

1500 வங்கி அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.11.2024



1500 வங்கி அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் யூனியன் வங்கியில் காலியாக உள்ள 1,500 வங்கி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவைய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் யூனியன் வங்கியில் காலியாக உள்ள 1,500 வங்கி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவைய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கி பணிகள் தேர்வுக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Local Bank Officer

காலியிடங்கள்: 1,500 (தமிழகத்திற்கு 200 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது)

சம்பளம்: மாதம் ரூ.48,480 - 85,920

வயதுவரம்பு: 13.11.2024 தேதியின்படி 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு பத்து ஆண்டுகளும் சலுகைகள் வழங்கப்படும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் மாநில அலுவலக மொழியில் எழுத, பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான தேதி, இடம் குறித்த விவரம், தேர்வு நுழைவுச் சீட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்வு நடைபெறும் மாநகரங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், நாகர்கோவில், கடலூர், விருதுநகர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.175. இதர அனைத்து பிரிவினரும் ரூ.850 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.11.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews