காமராஜர் கல்வி உதவித்தொகை பெற பொருளாதார அளவுகோல் – ஆளுநர் உத்தரவு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 09, 2021

Comments:0

காமராஜர் கல்வி உதவித்தொகை பெற பொருளாதார அளவுகோல் – ஆளுநர் உத்தரவு!!

புதுச்சேரியின் ஆளுநர் கிரண் பேடி அவர்கள் காமராஜர் கல்வி உதவித்தொகை மாணவர்களின் குடும்ப பொருளாதார நிலையின் அடிப்படையில் தான் வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
இலவச அரிசி திட்டம் முறைப்படுத்தல்:
புதுச்சேரியில் பொருளாதாரத்தில் வசதியானோருக்கு இனி ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி வழங்க வேண்டாம் என்று புதுச்சேரி அரசு அண்மையில் அறிவித்தது. வசதி படைத்தவர்களுக்கு இந்த திட்டம் கிடைப்பதால் எந்த பலனும் இல்லை, ஏழைகளுக்கு மட்டுமே இலவச அரிசி வழங்க வேண்டும் என்று அரசு முடிவு செய்தது. காமராஜர் கல்வி உதவித்தொகை:
புதுச்சேரியில் தனியார் சுயநிதி கல்லூரிகளில் பொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் அரசு இடஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு காமராஜர் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மருத்துவ படிப்பில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2.25 லட்சம் ரூபாயும், பொறியியல் படிப்பில் உள்ள மாணவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவியும் பெற்று வருகின்றனர். புதுச்சேரி அரசு இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யும் நிலையில் 2,000 மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பலனடைகின்றனர். ஆளுநரின் நிபந்தனை:
2019-2020ம் ஆண்டுக்கான மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க அனுமதி வேண்டி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் அவர்கள் ஒரு சில நிபந்தனையுடன் அனுமதியளித்தார். அதன்படி, காமராஜர் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு மாணவர்களை பொருளாதார அடிப்படையில் தான் தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவித்தார். பல வசதி படைத்த அதிகாரிகளின் பிள்ளைகள் இந்த திட்டத்தின் மூலம் பலனடைகின்றனர். இவர்களுக்கு வழங்குவதற்கு பதிலாக அந்த பணத்தை மற்ற தேவைப்படும் படிப்புகளுக்கு பயன்படுத்தலாம். அதன்மூலம் சாதாரண மக்கள் பலனடைவார்கள் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews