தமிழக திறந்தநிலை பல்கலையில் தொலைநிலை கற்பித்தல் முறையில் பி.எட். படிப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலை பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொலைநிலை மற்றும் திறந்த வெளி கற்றல் முறையில் பி.எட். படிப்பை நடத்த தமிழக திறந்தநிலை பல்கலைக்கு மத்திய அரசின் பல்கலை மானிய குழு ஒப்புதல் அளித்துள்ளது. தொலைநிலை கல்வி அமைப்பும் இதற்கு அனுமதி கொடுத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media-Bulletin - 23.02.2021 - PDF
பி.எட். படிப்பை நடத்த தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான என்.சி.டி.இ.யின் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. பிப்ரவரி, மார்ச் 2021 முதல் இதற்கான கல்வி ஆண்டு துவங்குகிறது.மே 2021 முதல் வகுப்புகள் துவங்கும். ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் தலா 500 மாணவர்கள் இந்த படிப்பில் சேர்க்கப்படுவர். கூடுதல் விபரங்களை www.tnou.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.