NEET- PG 2021 Examination Information Bulletin - PDF
மின் வாரியம், 'கேங்மேன்' பதவிக்கு தேர்வான, 9,613 நபருக்கு, பணி நியமன ஒதுக்கீட்டு ஆணையை மின்னஞ்சலில் அனுப்பியது. பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்காமல் வரலாற்றுப் பிழை!! தமிழக மின் வாரியம், கள பணிகளை மேற்கொள்ள, 'கேங்மேன்' என்ற பதவியில், 5,000 ஊழியர்களை தேர்வு செய்ய முடிவு செய்தது. பின், அந்த எண்ணிக்கை, 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.உடல் தகுதி மற்றும் எழுத்து தேர்வு முடிந்த நிலையில், தேர்வர்கள் எடுத்திருந்த மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டது. தேர்வு தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இதனால், தேர்வானவர்களுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.
இந்நிலையில், கேங்மேன் பணியிடங்களுக்கு தேர்வானவருக்கு நியமன உத்தரவு வழங்க, உயர் நீதிமன்றம், நேற்று முன்தினம் அனுமதி அளித்தது.அதைத்தொடர்ந்து, அன்று இரவே, 9,613 பேருக்கு, பணி நியமன ஒதுக்கீட்டு ஆணையை, மின் வாரியம், மின்னஞ்சல் வாயிலாக அனுப்பியது. அதில், அவர்களுக்கு, எங்கு வேலை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.