மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்: என்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 01, 2021

Comments:0

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்: என்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்?

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து, நாடு முழுமையாக மீளாத நிலையில், மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமனின் மூன்றாவது பட்ஜெட், அதிக சலுகை அறிவிப்புகள் உடையதாக இருக்கும் என்ற, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021 - 2022 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, இன்று தாக்கல் செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இரண்டாவது முறையாக அமைந்த பின், தாக்கல் செய்யப்படும் மூன்றாவது பட்ஜெட் இது. நாட்டின் முதல், முழுநேர பெண் நிதி அமைச்சரான, தமிழகத்தை பூர்வீகமாக உடைய நிர்மலா சீதாராமன், இன்று காலை, 11:00 மணிக்கு, பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்; இது, அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட். கொரோனா வைரஸ் பரவல் உள்ள நிலையில், முதல் முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் ஆவணங்கள் அனைத்தும், 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மந்தமாக இருந்த பொருளாதாரம், கொரோனா பரவலால் மேலும் மோசமடைந்தது. நாட்டின், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், மைனசில் சென்று உள்ளது.இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு சவால்களுக்கு இடையே இந்த பட்ஜெட்டை தயாரித்துள்ளார்.ஒரு பக்கம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்; அதே நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள, பொருளாதார பாதிப்பில் சிக்கியுள்ள மக்களையும் மீட்க வேண்டும். வருமான வரிச் சலுகைகள் உட்பட, மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டிஉள்ளது.கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பில் இருந்து மீட்கும் வகையில், மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு சலுகைகள், திட்டங்களின் தொடர்ச்சியாக இந்த பட்ஜெட் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக, அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த, ராஜ்யசபா குழு தலைவர்களின் கூட்டத்தை, சபை தலைவர் வெங்கையா நாயுடு நேற்று டில்லியில் நடத்தினார். இதில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். எகிறும் எதிர்பார்ப்புகள்மத்திய பட்ஜெட்டில் பல்வேறு வரிச் சலுகைகள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. வருமான வரியில் தற்போதுள்ள நிரந்தரக் கழிவான, 50 ஆயிரம் ரூபாய் சலுகையை, 1 லட்சம் ரூபாய் வரை உயர்த்த வாய்ப்புள்ளது கொரோனா வைரசால், மருத்துவக் காப்பீடு வாங்குவது அதிகரித்துள்ளது. அதனால், மருத்துவக் காப்பீடுகளுக்கான வருமான வரிச் சலுகை வரம்பு உயர்த்தப்பட வாய்ப்புள்ளது வருமான வரிச் சலுகைக்கான உச்ச வரம்பு, 2.5 லட்சம் ரூபாயாக உள்ளது; இது அதிகரிக்க வாய்ப்புள்ளது எம்.எஸ்.எம்.இ., எனப்படும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கு, வரி விடுமுறை அளிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்க வழி கிடைக்கும் பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்துள்ளோருக்கு, நீண்டகால மூலதன லாபத்தில், 1 லட்சம் ரூபாய் வரை வரிச் சலுகை உள்ளது. அதற்கு மேற்பட்ட தொகைக்கு வரி செலுத்த வேண்டும். அதனால், இந்த வரிச் சலுகை வரம்பு உயர்த்தப்படலாம் அல்லது வரி விகிதம் குறைக்கப்படலாம் பெரும்பாலான, மூத்த குடிமக்களுக்கு, 'பென்ஷன்' எனப்படும் ஓய்வூதிய திட்டங்கள் இல்லை. அதனால், மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்படலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews