Instruction to follow for NMMS Exam 2021 School Registration Process - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 01, 2021

Comments:0

Instruction to follow for NMMS Exam 2021 School Registration Process

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
NMMS 2021 தேர்வுக்கு 5.1.2021 முதல் 12.1.2021 வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
2021-ம் ஆண்டு பிப்ரவரி 21 -ல் நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பப் படிவங்களை 28.12.2020 முதல் 08.01.2021 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது பதிவேற்றம் செய்தல் தொடர்பான விவரங்கள் எட்டாம் வகுப்பு பள்ளி தலைமையாசிரியர்கள் விவரங்களை சம்பந்தப்பட்ட www.dge.tn.gov.in என்னும் இணையதளம் மூலமாக 05.01.2021 முதல் 12.01.2021 வரை பதிவு செய்யலாம் என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் அறிவரைகள் கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் EMIS- ன் அடிப்படையில் மாணவர்களின் பதிவு நடைபெறவுள்ளது. எனவே, பள்ளிகளுக்கான USER ID PASSWORD ஐ பயன்படுத்தி மாணவர்களின் EMIS எண்ணினை பதிவு செய்தவுடன் பெரும்பாலான விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும் அதில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திருத்தங்களை மேற்கொள்ளவும் விடுபட்டுள்ள விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும். புதியதாக பள்ளிகள் இணைப்பில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின்படி பதிவு (Register) செய்த பின் புதிய USER ID, PASSWORD - ஐ பயன்படுத்தி மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் பதிவேற்றம் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய விவரங்கள்: தேர்வர்கள் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்துள்ள விவரங்கள் சரிதானா என்பதனைப் பள்ளி ஆவணங்களை ஒப்பிட்டு சரிபார்த்த பின்னர் பதிவேற்றம் செய்ய வேண்டும் 3. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் மாணவர்களிடமிருந்து பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். 4. பள்ளி முகவரி என்ற கலத்தில் பள்ளியின் பெயர், முகவரியினை அஞ்சல் குறியீட்டுடன் (Pin Code) பதிவு செய்யப்படவேண்டும். வீட்டு முகவரி என்ற கலத்தில் பள்ளியின் பெயர் மற்றும் முகவரியினை பதியக்கூடாது. தேர்வரின் வீட்டு முகவரி மட்டுமே பதியப்படவேண்டும். 6. பெற்றோரின் தொலைபேசி/கைப்பேசி என்ற கலத்திலும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தொலைபேசி கைபேசி எண்ணையே பதிய வேண்டும். பள்ளியின் தொலைபேசி என்ற கலத்தில் மட்டும் பள்ளியின் தொலைபேசி எண்ணினை பதிந்தால் போதுமானது பதிவு செய்த விவரங்களை Declaration form Print out கொண்டு சரியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளவும். 8. 05.01.2021 பிற்பகல் முதல் 12.01.2021 வரை பதிவேற்றம் செய்த விவரங்களில் மாற்றம் ஏதேனும் இருப்பின் 12.01.2021-க்குள் சரி செய்து கொள்ளலாம். அதன் பின் எந்த பதிவுகளும் கண்டிப்பாக மாற்ற இயலாது, பதிவேற்றம் முடிந்தவுடன் Summary Report மற்றும் தேர்வர்களின் விவரத்தினை (ஒரு தேர்வருக்கு ரூ.50/- வீதம்) சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களிடம் 20.012021-க்குள் ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளிடமிருந்து பெறும் தொகையை ரொக்கமாக சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 25.01.2021 அன்று சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலரிடமிருந்து விண்ணப்பித்த அனைத்துத் தேர்வர்களின் தேர்வுக் கட்டணத் தொகை பெறப்பட்டுள்ளதா என்பதை உதவி இயக்குநர்கள் உறுதி செய்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும். Click here to download NMMS STUDENTS UPLOAD PROCEDURES
Click here to download 2021 NMMS REGISTRATION Model 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews