Whatsapp Vs Signal vs Telegram: சிறப்பம்சங்கள் என்னென்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 11, 2021

1 Comments

Whatsapp Vs Signal vs Telegram: சிறப்பம்சங்கள் என்னென்ன?

உலகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் வாட்ஸ் அப் ப்ரைவசி பாலிசி மற்றும் Signal. இதற்கு காரணம் உலக புகழ்பெற்ற டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க்கின் ஒற்றை ட்வீட். அவர் நேற்று ‘use signal’ என்ற ஒற்றை ட்வீட்டை பதிவிட்டார். அவர் பதிவிட்ட சில மணி நேரங்களில் இருந்து வாட்ஸ் அப்பை புறம் தள்ளிவிட்டு சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதேபோல், இன்னும் சில முக்கிய பிரமுகர்கள் Signal அல்லது Telegram பயன்பாடுகளைப் பயன்படுத்துங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த இரண்டு நாட்களில் ஏராளமான வாட்ஸ்அப் பயனர்கள் சிக்னல் மற்றும் டெலிகிராம் ஆப்பை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். அப்படி என்னதான் புதிய ப்ரைவசி பாலிசியில் உள்ளது?
வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய பாலிசியில், பயனாளர்களின் தகவல்களை ஃபேஸ்புக் உடன் பகிர ஒப்புதல் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. பயனாளர்கள் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் வாட்ஸ் அப் கணக்கு அழிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதற்கு நீங்கள் ஒப்புதல் வழங்குவதன் மூலம் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் மொபைல் எண், சேவை தொடர்பான தகவல்கள், Mobile device தகவல்கள், IP address உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் வாட்ஸ் அப்பால் சேமித்து வைக்கப்பட்டு பேஸ்புக் நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்யப்படும். உங்கள் தனிப்பட்ட மெசேஜ்கள் மட்டுமே பிரைவசியில் இருக்க வாய்ப்புள்ளது என்பது இதில் தெரிகிறது. முன்னர் இருந்ததை போல Encrypted வடிவில்தான் இந்த தகவல்கள் அனைத்தும் சேமிக்கப்படவிருக்கின்றன. அதேபோல் நீங்கள் ஃபார்வேர்டு செய்யும் மெசேஜ்களையும் வாட்ஸ் அப் கண்காணிக்கவிருக்கிறது. சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிக்கு ஏன் மாற வேண்டும்?
வாட்ஸ்அப் ஆனது சிக்னல் ஆப்பின் அதே end-to-end encryption protocol-ஐ பயன்படுத்துகிறது. உதாரணத்திற்கு வாட்ஸ் அப்பில் பயன்படுத்தப்படும் அனைத்து வசதிகளும் சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலியில் உள்ளது. ஆனால் இதன் பின்னர் வாட்ஸ் அப்பை விட சிக்னல் செயலியில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் என்றே கூறலாம்.
சிக்னல்:
வாட்ஸ் அப்பை போல் மீடியா ஷேரிங், வாய்ஸ் கால் வசதி, வீடியோ கால் வசதி, ஆகியவை இதிலும் உள்ளது. இந்த செயலியில் பயனாளர்களின் அடிப்படை தரவுகள் சேகரிக்கப்படுமே தவிர வாட்ஸ் அப்பை போன்று இருப்பிட தகவல், தொலைப்பேசி தகவல்கள் ஆகியவை சேகரிக்கப்படாது. டெலிகிராம்.
வாட்ஸ் அப்பை போல் மீடியா ஷேரிங், வாய்ஸ் கால் வசதி இதிலும் உள்ளது. இதில் வீடியோ கால் வசதி இருந்தாலும் குரூப் வீடியோ கால் வசதி இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இதிலும் வாட்ஸ் அப்பை போன்று பயனாளர்களின் அடிப்படை தரவுகள் சேகரிக்கப்படுமே தவிர வாட்ஸ் அப்பை போன்று இருப்பிட தகவல், தொலைப்பேசி தகவல்கள் ஆகியவை சேகரிக்கப்படாது. கடந்த இரண்டு நாட்களில் ஏராளமான வாட்ஸ்அப் பயனர்கள் சிக்னல் மற்றும் டெலிகிராம் ஆப்பை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இதன்காரணமாக இதன் காரணமாக, புதிய பயனர்களுக்கு அனுப்பப்படும் வெரிஃபிகேஷன் கோடு உருவாக்குவதில் சர்வர் சிஸ்டம்களே தடுமாறிக் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது என்று கூறப்படுகிறது.

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews