Breaking

Monday, January 04, 2021

மத்தியக் கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு உதவித்தொகை: விண்ணப்பிக்க அழைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ’’ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்கு 2020-2021 ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.2 லட்சம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக 100 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்குக் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்குப் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை மாணவர்கள் பூர்த்தி செய்து அந்தந்தக் கல்வி நிறுவனத்தில் வழங்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை வரும் 4-ம் தேதி முதல் 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களைப் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை 5, என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்’’. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு: 044-2855142 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog