மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத்தில் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் முதல் மூடப்பட்ட பள்ளிகள் இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. அதேநேரத்தில் ஔரங்காபாத் மாநகராட்சி ஆசிரியர்களுக்கு கரோனா பரிசோதனையைக் கட்டாயமாக்கியுள்ளது.
டிசம்பர் 28 முதல் ஜனவரி 3 வரை பல்வேறு பள்ளிகளின் 1,358 ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு பணியாளர் இதுவரை கரோனா வைரஸுக்கு சாதகமாக உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கல்வி அதிகாரி ராம்நாத் தோர் கூறுகையில்,
பள்ளிக்கு வருவதில் மாணவர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும், பெற்றோரின் ஒப்புதல் இல்லாத சில மாணவர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருவதில் ஆர்வம் காட்டி வருவதால், இனிவரும் நாள்களில் வருகை எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார்.
மேலும் மாணவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற அனைத்தும் நடவடிக்கைகளும் கடைப்பிடிக்க அறிவுறத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வரை ஔரங்காபாத்தில் கரோனா மொத்த பாதிப்பு 45,762 ஆக உள்ளது. அதே நேரத்தில் 1,206 பேர் இந்த நோய் காரணமாக இறந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.