தமிழகத் தில் 2021ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிர மாக ஈடுபட்டுள்ளது. வரும் ஜனவரி 20ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் தயார் செய்ய வும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
அதன்படி வாக்காளர் பட்டியல் தயார் செய்ய, 2018-19ம் கல்வியாண்டில், பிளஸ் 2 பயின்று தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர், வீட்டு முகவரி, செல்போன் எண் ஆகியவற் றின் விவரங்களை சமர்ப் பிக்கவேண்டும் என்று, அந் தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கலெக்டர்கள் மூலம் அறிவு றுத்தப்பட்டுள்ளது.
அதன் படி தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங் கள் சேகரிக்கப்பட்டு வரு கிறது. வேலூர் மாவட் டத்தில், கடந்த 2019ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்களை "velloreceo@gmail.com' என்ற முகவரி யில் அனுப்ப அனைத்து அரசு மற்றும் அரசு நிதி யுதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், மேல் நிலைப்பள்ளிக ளின் தலைமை ஆசிரியர் கள், முதல்வர் களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள் ளார்.
Search This Blog
Sunday, January 17, 2021
Comments:0
Home
11th-12th
ELECTION
STUDENTS
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர் விபரம் சமர்ப்பிக்க பள்ளிகளுக்கு உத்தரவு
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர் விபரம் சமர்ப்பிக்க பள்ளிகளுக்கு உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.