Breaking

Monday, December 28, 2020

ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியாவில் கொரோனா நோயின் காரணமாக இந்தியா முழுவதும் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு நீட்டிக்க படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிக்கப் படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த பொது முடக்கத்தின் 11-ம் கட்டம் வருகிற 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில்,மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தற்போது நாடு முழுவதும் அன்லாக் செயல்முறை தொடங்கியுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், அன்லாக் தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை வருகிற 2021 ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கொரோனா தொற்று தொடர்ச்சியான குறைந்தாலும், விழிப்புணர்வு, கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கையை பராமரிக்க வேண்டியது அவசியம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog