கல்வித்துறை உத்தரவால் 'டெட்' தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள், எதிர்பர்ப்பில் உள்ளனர்.
பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படாத சூழலில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து கல்வி துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.
நடப்பாண்டு, பெரும்பாலான அரசு பள்ளிகளில், அதிகளவு மாணவர்கள் இணைந்துள்ளனர்; ஆனால், போதிய ஆசிரியர்கள் இல்லை. பல பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது;
ஆனால், தேவைக்கு மிகுதியாக ஆசிரியர்கள் உள்ளனர்.'இச்சூழலில், ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக உள்ள பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடம் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
விரைவில் 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், புதிய ஆசிரியர் நியமனத்துக்கு தகுதி வாய்ந்த பணியிடங்கள் கணக்கிடப்படும்; அரசு உத்தரவுக்கு ஏற்ப, பணியிடம் நிரப்பப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.'
டெட்' தேர்வெழுதி, தேர்ச்சி பெற்று, கடந்த, 2013 முதல் வேலை கிடைக்காமல் காத்துள்ள பல பட்டதாரி ஆசிரியர்கள், 'வேலை கிடைக்கும்' என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.