Breaking

Friday, December 04, 2020

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகையை அதிகரித்து வழங்க பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாணவர்களுக்கு தரும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகையை மாநில அரசுகளுக்கு அதிகரித்து தரவேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் திட்டத்தின்கீழ் தரப்பட வேண்டிய தொகையை மத்திய அரசு உடனடியாக தரவேண்டும் என்று ஏற்கனவே தங்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்.12வது ஐந்தாண்டு திட்டத்தின்போது (2012-2017) ஒவ்வொரு 5 ஆண்டுகளின் முடிவிலும் இந்த தொகையை மாற்றி அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி தமிழகத்துக்கு 2012-2013ம் ஆண்டுக்கு ரூ.353.55 கோடி விடுவிக்கப்பட வேண்டும். இந்த தொகை 2017-2018ம் ஆண்டுக்கு ரூ.1526.46 கோடியாகும். தமிழக அரசு இந்த கல்வி உதவித்தொகையாக 2017-2019ம் ஆண்டுக்கு ரூ.1689.34 கோடி வழங்கியுள்ளது. 2018-2019ம் ஆண்டுக்கு ரூ.1910.19 கோடியும், 2019-2020ம் ஆண்டுக்கு ரூ.2005.70 கோடியும் வழங்கியுள்ளது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து முறையே ரூ.162.88 கோடியும், ரூ.383.73 கோடியும், ரூ.479.24 கோடியும் மட்டுமே வந்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் ரூ.2110.90 கோடி இந்த வகையில் மாணவர்களுக்கு தரப்பட வேண்டும். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.584.44 கோடியாகும். இது மாநில அரசுக்கு மிகுந்த நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் திட்டத்தில் மாநில அரசுகள் அதிக அளவு நிதியை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதியில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசுகள் 40 சதவீதமும் பங்கீடு செய்யுமாறு மத்திய சமூக நீதித்துறைக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்திற்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகையை இந்த விகிதத்தின்படி தருமாறு சமூக நீதித்துறைக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டத்தில் மாநில அரசுகள் அதிக அளவு நிதியை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog