அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், பொருளாதார சூழலால் கட்டணம் செலுத்த இயலாமல், பாதியிலேயே படிப்பை கைவிடுவது வலி மிகுந்தது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வினால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, 7 புள்ள 5 சதவிகித உள் ஒதுக்கீட்டை, தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளதாக, நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்த இயலாமல், ஏழை அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, சினிமா நடிகர்கள், மூத்த வழக்கறிஞர்கள், பிரபலமானவர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் ஏழை மருத்துவ மாணவர் ஒருவரை தத்தெடுத்து, அவர்களின் கட்டணத்தை ஏற்க முன்வர வேண்டும் என்றும் நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுயநிதி கல்லூரிகளின் கட்டண நிர்ணயக்குழு, சுகாதாரத்துறை செயலர், மருத்துவக்கல்வி இயக்குநர் பதிலளிக்கவும், நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.