நான்கு நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 04, 2020

Comments:0

நான்கு நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'வாக்காளர் சிறப்பு முகாம், நான்கு நாட்கள் நடத்தப்படும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்காக, வரும், 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அன்று முதல், டிச.,15 வரை, வாக்காளர் திருத்தப் பணி நடைபெறும். வாக்காளர்கள் வசதிக்காக, வரும், 21, 22ம் தேதிகளிலும், டிச., 12, 13ம் தேதிகளிலும், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.இம்முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். அடுத்த ஆண்டு, ஜன., 20ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.தேர்தல் கமிஷன் அறிவுரைப்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும், ஓட்டுச்சாவடி நிலை முகவர்களை நியமிக்கலாம்.அவர்கள் சிறப்பு முகாம்கள் நடக்கும் தேதிகளில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை, சரி பார்க்க உதவலாம் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews