தமிழகம் முழுவதும் உள்ள அரசு மகளிர் விடுதிகளில் தரமான சிசிடிவி இருப்பதை உறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா கொள்முதலுக்கான டெண்டரை ரத்து செய்யகோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
தமிழகம் முழுவதும் உள்ள 502 அரசு மகளிர் விடுதிகளில் தரமான கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உபகரணங்கள் பொருத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகளிர் விடுதிகளில் 2510 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தமிழக அரசு டெண்டர் கோரியதை ரத்து செய்யக்கோரிய வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
டெண்டர் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாத மனுதாரருக்கு இந்த வழக்கை தொடர எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து டெண்டரை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு உரிமையில்லை என கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.