'நீட்' தேர்வில், அரசு பள்ளி அளவில், மாநிலத்தில், மூன்றாம் இடம் பெற்ற தேனி மாணவி அனுஷா தேவி, மருத்துவக் கல்லுாரியில் சேர வாய்ப்பு கிடைத்தும், பண வசதியின்றி தவித்து வருகிறார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, சங்கரமூர்த்திபட்டியைச் சேர்ந்தவர் அய்யணசாமி; மாட்டு வண்டி ஓட்டும் தொழிலாளி. இவரது மூத்த மகள் அனுஷா தேவி, 19.
வீட்டில் இருந்து, 5 கி.மீ., துாரம் நடந்து, வைகை அணை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். 2018 - 19ல் பிளஸ் 2 தேர்வில், 600க்கு 480 மதிப்பெண் பெற்றார்.டாக்டராக வேண்டும் என்ற ஆர்வத்தால், பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன், அரசு, 'நீட்' பயிற்சி மையமான, சென்னை சாய் ஸ்பீடு மெடிக்கல் கோச்சிங் சென்டரில், நான்கு மாதங்கள் தங்கி படித்தார். சமீபத்திய, 'நீட்' தேர்வில், 720க்கு, 397 மதிப்பெண் பெற்றார்.
மருத்துவ படிப்புக்காக, அரசு பள்ளி மாணவர்களுக்கு, மாநில அரசு வழங்கிய, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில், மாநில அளவில் மூன்றாவது இடத்தை, இம்மாணவி பிடித்துள்ளார். இவருக்கு, மருத்துவ கல்லுாரியில் சீட் கிடைப்பது உறுதியாகி உள்ளது.அனுஷாதேவி கூறுகையில், ''அரசின் சிறப்பு ஒதுக்கீட்டால் தான், கிராமத்தில் படித்த எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். ஆனால், குடும்ப ஏழ்மையால், கல்விக்கு செலவிட முடியாத நிலையில், பெற்றோர் உள்ளனர். படிப்புக்கான உதவியை எதிர்பார்த்துள்ளேன்,'' என்றார்.உதவ விரும்புவோர், 63829 39571 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.