அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு, சிறப்பு சலுகை வழங்குவதாக கூறி ஏமாற்றும், சைபர் குற்றவாளிகளிடம், எச்சரிக்கையாக இருக்கும்படி, எஸ்.பி.ஐ., வங்கி அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, பாரத ஸ்டேட் வங்கி விடுத்த எச்சரிக்கை:'லாட்டரி திட்டத்தில் வெற்றி பெற்றுள்ளீர்கள்' எனக்கூறி, 'வாட்ஸ் ஆப்' மற்றும் குறுந்தகவல் வாயிலாக, வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நோக்கில், சைபர் குற்றவாளிகள் அணுகுகின்றனர். எஸ்.பி.ஐ.,யில் லாட்டரி திட்டமோ அல்லது அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளோ, வழங்கப்படுவதில்லை.அதுபோன்று வரும் அழைப்புகளை, குறுந்தகவல்களை நம்ப வேண்டாம்.
வங்கிகள் தரப்பில், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விபரங்களையோ, வங்கி கணக்கின் குறிப்பிட்ட விபரங்களையோ, இ - மெயில், வாட்ஸ் ஆப், போன் மற்றும் 'வாட்ஸ் ஆப் கால்' வாயிலாகவோ எப்போதும் கேட்பதில்லை.சைபர் குற்றவாளிகள், உங்களின் ஒரு சிறிய தவறுக்காக காத்திருக்கின்றனர்.எனவே, அது போல வரும் போலி அழைப்புகளை நம்ப வேண்டாம். மோசடிகளை தவிர்க்க விழிப்புணர்வுடன் இருங்கள்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.