அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதால் தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப் பட்டவர்களின் விபரங்களை வெளியிட தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்சி இடமலைபட்டி புதுார் மெர்சி வாசன் உட்பட 29 பேர் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் 1058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) சார்பில் 2017 ல் எழுத்துத் தேர்வு நடந்தது.நாங்கள் பங்கேற்றோம். 'அவுட்சோர்சிங்'(அயல்பணி) மூலம் தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
விடைத்தாள்களை மதிப்பீடு செய்ததில் சிலருக்கு அதிக மதிப்பெண் வழங்கி முறைகேடு நடந்தது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர். சம்பந்தப்பட்ட 196 பேர் எந்தத் தேர்விலும் பங்கேற்க முடியாத வகையில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 2017 ல் நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. புதிதாக தேர்வு நடந்த 2019 நவ.27 ல் அறிவிப்பு வெளியானது. இதனால் 2017 ல் நேர்மையாக தேர்வெழுதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் தகுதியானவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்க வேண்டும்.தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டவர்கள் யார் யார் என்பதை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. அவர்கள் மீண்டும் தேர்வில் பங்கேற்ற வாய்ப்புள்ளது. அவர்களின் விபரங்களை வெளியிட வேண்டும்.
தற்போது கூடுதலாக ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் அடிப்படையில் 2019 அறிவிப்பில் மாற்றம் செய்து வெளியிட உத்தர விட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் உயர்கல்வித்துறை செயலாளர் டி.ஆர்.பி. தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.