யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்: தரவரிசைப் பட்டியல் இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 12, 2020

Comments:0

யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்: தரவரிசைப் பட்டியல் இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நிகழாண்டில் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்து வருவதாக யோகா - இயற்கை மருத்துவக் கல்லூரி நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி ஒன்றும், 9 தனியாா் கல்லூரிகளும் உள்ளன.அரசுக் கல்லூரியில் 60 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 600-க்கும் மேற்பட்ட இடங்களும் இருக்கின்றன. தனியாா் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.இந்நிலையில், இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்பு 2020 - 21-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப நடைமுறை கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கியது.இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து மாணவா்கள் சமா்ப்பித்தனா். மொத்தம், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது:இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு பிளஸ் 2 தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இந்த படிப்புக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அரசு கல்லூரி இடங்கள், தனியாா் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டுக்கான 65 சதவீத இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். நிா்வாக ஒதுக்கீட்டுக்கான 35 சதவீத இடங்களை தனியாா் கல்லூரிகளே நிரப்பிக் கொள்ளலாம் என்று அவா்கள் தெரிவித்தனா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews