பிஇ, பிடெக் கவுன்சலிங்கில் பங்கேற்று வரும் மாணவ, மாணவியர்களில் ஒருவர் கூட 124 ெபாறியியல் கல்லூரிகளில் சேர விருப்பம் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கு தொழில் நுட்ப கல்வி இயக்ககம், ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நடத்தி வருகிறது. இதில் 1 லட்சத்து 63 ஆயிரம் இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு பதிவு செய்திருந்த நிலையில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 406 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் தொழிற்கல்வி மாணவர்களுக்கு கடந்த 8ம் தேதி முதல் 16ம் தேதி வரையும் நடந்தது. அதில் 1533 மாணவ மாணவியர் ஆன்லைன் மூலம் பங்கேற்றனர். அவர்களில் 946 பேர் மட்டுமே கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்தனர். பொதுப்பிரிவு கவுன்சலிங் 28ம் தேதி வரை நடக்கிறது. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 873 பேர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
முதலில் 199.75 கட்ஆப் பெற்ற மாணவ மாணவியர் என 12 ஆயிரத்து 263 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 10 ஆயிரத்து 200 மாணவ மாணவியர் மட்டுமே கட்டணம் செலுத்தினர். இவர்களிலும் 7510 பேர் மட்டுமே கவுன்சலிங்கில் பங்கேற்று கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்தனர்.
இதையடுத்து நடந்த இரண்டாவது சுற்றில் 174.75 கட்ஆப் முதல் 145.5 கட்ஆப் பெற்ற 22 ஆயிரத்து 904 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 13 ஆயிரத்து 415 பேர் மட்டுமே தங்களுக்கான கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்து உறுதி செய்தனர். அடுத்ததாக நடந்த 3வது சுற்றில் 145 கட்ஆப் முதல் 111.75 கட்ஆப் பெற்ற 35 ஆயிரத்து 132 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 18 ஆயிரம் பேர் மட்டுமே இடங்களை தேர்வு செய்தனர். இவர்களுக்கான இட ஒதுக்கீடு உத்தரவுகள் இன்று வழங்கப்பட உள்ளது. 24ம் தேதி இறுதி ஒதுக்கீடு உத்தரவுகள் வழங்கப்படும்.
இதையடுத்து, 4வது சுற்று நடக்க உள்ளது. இந்நிலையில், இதுவரை முடிந்த சுற்றுகளின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 461 கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 57 ஆயிரத்து 689 இடங்களுக்கு கவுன்சலிங் நடந்து வரும் நிலையில், இரண்டாது சுற்றின் முடிவில் 20 ஆயிரத்து 925 இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. 461 கல்லூரிகளில் 124 கல்லூரிகளில் உள்ள இடங்களை ஒரு மாணவர் கூட தேர்வு செய்யவில்லை. 221 கல்லூரிகளில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். 347 கல்லூரிகளில் உள்ள இடங்களில் 5 சதவீதத்துக்கும் கீழ் தேர்வு செய்யவில்லை. மொத்தமாக பார்க்கும் போது, 22 கல்லூரிகளில் தான் 75 சதவீத்துக்கும் மேல் இடங்கள் நிரம்பியுள்ளன. இது வரை நடந்து முடிந்துள்ள இரண்டு சுற்றுகளின் இறுதியில் 40 சதவீத மாணவர்கள் கவுன்சலிங்கில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.