அரசு கல்லூரிகளில் கொண்டு வரப்பட உள்ள ஒரே ஷிப்ட் நடைமுறையை தனியார் கல்லூரிகளுக்கும் அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு டிசம்பர் 8ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்யாவிட்டால் உயர் கல்வித்துறை செயலாளரை ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் 2006ம் ஆண்டு கல்லூரிகளின் பாட வேளை நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி காலை, மாலை என இரு ஷிப்ட் முறை அமல்படுத்தப்பட்டது. காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒரு ஷிப்ட், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:30 மணி வரை ஒரு ஷிப்ட் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், 2020-21ம் கல்வியாண்டு முதல் பழைய முறைப்படி, காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை வகுப்புகள் நடத்த அனுமதியளித்து கடந்த ஜூலை மாதம் தமிழக உயர் கல்வித் துறை செயலாளர் அரசாணை பிறப்பித்தார். இந்த அரசாணையை, தமிழகம் முழுவதும் உள்ள 1,249 அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுய நிதி கல்லூரிகளிலும் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி, திருவண்ணாமலையைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தற்போது 50 அரசு கல்லூரிகளில் மட்டும் சோதனை அடிப்படையில் ஒரே ஷிப்ட் முறை அமல்படுத்த உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் இத்திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்த மனுவுக்கு பதில் தர அவகாசம் வேண்டும் என்றார். இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், கடைசி வாய்ப்பாக டிசம்பர் 8ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் உயர் கல்வி துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.
அரசு கல்லுாரிகளுக்கு நிர்ணயித்துள்ள நேரத்தை, தனியார் கல்லுாரிகளுக்கும் நீட்டிக்க கோரிய வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய, உயர் கல்வித் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம், கடைசி வாய்ப்பு வழங்கி உள்ளது.
அன்று பதில் அளிக்காவிட்டால், உயர் கல்வித்துறை செயலர் ஆஜராக வேண்டியது வரும் என்றும் எச்சரித்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், புளியம்பட்டியைச் சேர்ந்த, கே.சுந்தரம் என்பவர் தாக்கல் செய்த மனு:அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள்,காலை, 9:30 முதல் மாலை, 4:30 மணி வரை இயங்க வேண்டும் என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் கூறியுள்ளதை, அரசு ஏற்று, 2020 ஜூலையில் உத்தரவு பிறப்பித்தது.
தமிழகத்தில், 1,358 கல்லுாரிகள் உள்ளன. 109அரசு கல்லுாரிகள்; 162 அரசு உதவி பெறும் கல்லுாரிகள்; 24 பல்கலை உறுப்பு கல்லுாரிகள்; 1,063 தனியார் கல்லுாரிகள் உள்ளன. அரசு உத்தரவில், உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகள் பற்றி குறிப்பிடப் படவில்லை. இந்த கல்லுாரிகளில், காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை ஒரு பகுதி; பிற்பகல், 2:00 முதல் மாலை, 5:30 மணி வரை ஒரு பகுதி என, இரண்டு வகையான நேர அட்டவணை உள்ளது. அரசு பிறப்பித்த உத்தரவு, தனியார் கல்லுாரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கு பொருந்தவில்லை
.அரசு கல்லுாரிகளுக்கும், மற்ற கல்லுாரிகளுக்கும் இடையே பாகுபாடு காட்டுவதாக உள்ளது. அரசு கல்லுாரிகள் இயங்கும் நேரத்தை, தனியார் கல்லுாரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கும் அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'முதல் கட்டமாக, 50 அரசு கல்லுாரிகளில் அமல்படுத்துகிறோம். அதன், 'ரிசல்ட்' எங்களுக்கு கிடைக்கவில்லை. பதில் அளிக்க, அவகாசம் வேண்டும்' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், 'தனியார் கல்லுாரிகளுக்கும் விரிவுபடுத்தப் போகிறீர்களா; இல்லையா; பதில் அளிக்க கடைசி வாய்ப்பு அளிக்கிறோம். 'தவறினால், உயர் கல்வித் துறை செயலர் ஆஜராக உத்தரவிட வேண்டியது வரும்' என, எச்சரித்தனர். விசாரணையை, டிச., 8க்கு தள்ளி வைத்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.