Breaking

Thursday, October 22, 2020

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றோருக்கான பணி ஒதுக்கீடு வழக்கு: தீர்ப்பாயம் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றோருக்கான பணி ஒதுக்கீடு, வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது' என, ஐ.ஏ.எஸ்., பணி ஒதுக்கக் கோரி, பார்வை குறைபாடு உடைய பெண் தாக்கல் செய்த வழக்கில், மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பூரணசுந்தரி, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு: நான், பார்வை குறைபாடு உடைய மாற்றுத் திறனாளி. 2019ல் நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில், 286வது இடம் பெற்றிருந்தேன். எனக்கு வருமான வரித் துறையில், பணி ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் சட்டப்படி, பார்வை திறன் குறைபாடு உடையவர்களுக்கு, ஐ.ஏ.எஸ்., பணி ஒதுக்கீட்டில் வழங்க வேண்டிய இட ஒதுக்கீட்டை, முறையாக பின்பற்றவில்லை. இடஒதுக்கீட்டை முறையாக மேற்கொள்ளாமல் செய்யப்பட்ட பணி நியமன ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். புதிதாக பணி நியமன ஒதுக்கீடு செய்து, எனக்கு ஐ.ஏ.எஸ்., பணி வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டது. இந்த மனு, மத்திய நிர்வாக தீர்ப்பாய நீதித் துறை உறுப்பினர் எஸ்.என்.டெர்டல் மற்றும் நிர்வாக உறுப்பினர் சி.வி.சங்கர் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர்கள் கண்ணன், பாஸ்கர் மதுரம் வாதாடினர். விசாரித்த உறுப்பினர்கள், மனுவுக்கு பதில் அளிக்குமாறு, மத்திய பணியாளர் துறை செயலர் மற்றும் யு.பி.எஸ்.சி., கமிஷனுக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், '2019 சிவில் சர்வீசஸ் தேர்வின்படி வழங்கப்பட்ட நியமன ஒதுக்கீடு, வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது' என, இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். வழக்கை, 2021 ஜனவரிக்கு ஒத்தி வைத்தனர் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog