மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வழிகாட்டுதலின்படி திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புடைய தொழிற்திறன் மேம்பாட்டிற்கு 2 புதிய பாடத்திட்டங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகத் துணைவேந்தர் பிச்சுமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''3 ஆண்டு இளநிலைத் தொழிற்கல்வி எனப்படும் Bachelor of Vocational Education (B.Voc) in Food Processing. Analytical and Quality Control Techniques. அதாவது உணவு பதனிடுதல், தரக் கட்டுப்பாடு மற்றும் பரிசோதனை தொழில்நுட்பத்தில் மூன்று ஆண்டு இளநிலைத் தொழிற்கல்வி. இந்தப் பாடத்திட்டத்தில் உணவு பதனிடுதல், உணவு தரக் கட்டுப்பாடு மற்றும் உணவுப் பரிசோதனையில் உள்ள கோட்பாடுகளை பல்கலை.யில் பாடமாகவும் படிக்கும்போதே உணவு பதனிடும் தொழிற்சாலையில் திறன் மேம்பாட்டிற்கு உள்ளிருப்புப் பயிற்சியும் (Internship) வழங்கப்படும்.
மற்றொரு பாடத்திட்டம் Advanced Diploma in Agriculture, Organic Farming and Mushroom Cultivation. அதாவது இயற்கை வேளாண்மை மற்றும் காளான் வளர்ப்பில் மேம்பட்ட பட்டயப் படிப்பு.
இந்தப் பாடத்திட்டத்தில் இயற்கை வேளாண்மையில் உள்ள அனைத்து அம்சங்களையும், குறிப்பாக இயற்கை வேளாண் பயிர்செய்யும் முறை, நுண்ணுயிர் இயற்கை உரம் தயாரித்தல், பஞ்ச காவ்யா தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், பல்வேறு முறையில் காளான் வளர்த்தல், மதிப்புக்கூட்டு முறையில் காளான் உணவு தயாரித்தல், பண்ணை மேலாண்மைக் குழு அமைத்தல், விளைபொருள் சந்தைப்படுத்துதல், இயற்கை வேளாண் பொருட்கள் சான்று பெறுதல், ஏற்றுமதிக் கொள்கைகள் போன்றவற்றின் கோட்பாடுகளைப் பல்கலை.யில் பாடமாகப் படிக்கும்போதே தன்னார்வத் தொண்டு நிறுவனம், தனியார் மற்றும் அரசு வேளாண் பண்ணையில் நேரடி உள்ளிருப்புத் திறன் பயிற்சியும் குறுகிய காலப் பயிலரங்கம் மூலம் திறன் மேம்பாட்டுடன் கூடிய உடனடி வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும்.
உணவு பதனிடும் தொழிற்சாலையிலும் இயற்கை வேளாண்மைத் துறை சார்ந்த பணிகளிலும் நிறையப் பணியிடங்கள் உருவாகி வரும் இந்தக் காலகட்டத்தில், இந்தப் பணியிடங்களுக்கு மாணவர்களைத் தயார் செய்ய NSQF - National Skill Qualififcation Framework தேசியத் தொழிற்திறன் தகுதி வரையறையின்படி மேற்கூறிய 2 பாடத் திட்டங்களை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பாடத்திட்டமாகத் தயாரித்துள்ளது .
மேலும் திறன் மேம்பாட்டிற்கும், உள்ளிருப்புப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்குப் பல தொழிற்சாலைகள், இயற்கை வேளாண் பண்ணை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறது.
இந்தப் பாடத்தில் நடப்புக் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் அக்.28-ம் தேதியாகும். இது தொடர்பான விவரங்களுக்கு பல்கலைக்கழக விலங்கியல் துறை இணைப் பேராசிரியர் மற்றும் UGC Nodal Officer சு.காளிதாஸை 0462-2563172, 94430 22508 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.