Breaking

Sunday, October 25, 2020

வீர தீரச் செயல் விருது: விண்ணப்பம் வரவேற்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'அண்ணா பதக்கம் மற்றும் கபீர் புரஸ்கார் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்களை வழங்கலாம்' என அரசு அறிவித்துள்ளது. வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு ஆண்டும் முதல்வரால் குடியரசு தின விழாவில் வழங்கப்படுகிறது. 1 லட்சம் ரூபாய் காசோலை பதக்கம் மற்றும் தகுதியுரை இதில் அடக்கம். வீர தீரச் செயல் புரிந்த தமிழகத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த பதக்கம் பெற தகுதியுடைவர்கள்.பொது மக்களில் மூவருக்கும் அரசு ஊழியர்களில் மூவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். இதேபோல சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான 'கபீர் புரஸ்கார்' விருதும் முதல்வரால் வழங்கப்படுகிறது.தமிழகத்தில் வசிக்கும் அனைவரும் இந்த பதக்கம் பெற தகுதியுடையவர்கள்.இந்த விருது மூன்று பேருக்கு 20 ஆயிரம் ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் 5000 ரூபாய் காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவற்றுடன் வழங்கப்படும். வரும் 2021ம் ஆண்டு பதக்கத்திற்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர்கள் வாயிலாகவோ அல்லது awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ டிச. 14க்குள் பொதுத்துறை முதன்மை செயலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.பதக்கம் பெற தகுதியுள்ளவர்கள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படுவர். முதல்வரால் ஜன. 26ம் தேதி குடியரசு தினத்தில் பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்படுவர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog