தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6
நக.எண்.004577/ஜே2/2020 நாள். -.10.2020
பொருள்
தொடக்கக் கல்வி-பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விஜயதசமி (26.10.2020) நாளன்று மாணவர்களை பள்ளியில் சேர்த்தல் முன்னேற்பாடுகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுதல்
பார்வை
1.அரசாணை (1டி) எண்.273, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை (பே.மே.4)த்துறை, நாள்.13.08.2020.
2. சென்னை -6, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்.457 /ஜெ2/ 2020,நாள்.13.08.2020.
3. சென்னை -6, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்.4577/ஜெ2 /2020, நாள்.03.09.2020. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முதன்முதலாக பள்ளியில் சேர்ப்பது நடைமுறையில் இருந்து வருகின்ற வழக்கமாகும். எனவே அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் (26.10.2020 விஜயதசமி நாளன்று மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தல் சார்பாக கீழ்கண்ட அறிவுரைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் அறியும் வண்ணம் ஊர் பொது இடங்களில் பதாகைகள் வைத்தும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கூட்டங்கள் நடத்தியும், பொது மக்களுக்கு தெரியப்படுத்தி விஜயதசமி நாளன்று 5. வயதுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடியில் பயிலும் 5 வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை விஜயதசமி நாளன்று அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ள 5. வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை விஜயதசமி நாளன்று அரசுப் பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், விஜயதசமி நாளன்று (26.10.2020) பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் வருகை புரியும் போது அவர்களை இன்முகத்துடன் வரவேற்று குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதுடன் அன்றைய தினமே குழந்தைகளுக்கு விலையில்லாப் பாடபுத்தகங்கள் வழங்க வேண்டும். எனவே மேற்கண்ட தகவலினை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்தி விஜயதசமி நாளன்று அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடக்கக் கல்வி இயக்குநர்
பெறுநர்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
நகல்
அரசு முதன்மைச் செயலாளர்,
பள்ளிக்கல்வித்துறை,
தலைமைச் செயலகம்.
சென்னை -9. (தகவலுக்காக பணிந்தனுப்படுகிறது) 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.