வைரஸ் தொற்று பரவும் காலத்தில், ஆசிரியர்களை வாழ வைக்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தவும், பெரியநாயக்கன்பாளையம் அருகே, பிரஸ்காலனி செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தின் ஒரு பகுதி, விவசாய களமாக மாற்றப்பட்டு, பயிர் செய்யப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் முதலில், 'பேக்கிங்' முறையில், 200 பேக்குகளில் மாடித்தோட்டத்தை உருவாக்கினர். அதை பராமரிப்பதில் மாணவ, மாணவியர் அதிக ஆர்வம் காட்டியதால், பள்ளி வளாகத்தில் உள்ள நிலத்தில், இயற்கை விவசாயத்தை பள்ளி நிர்வாகம் துவக்கியது.காய்கறி விதை இலவசம்!அதை பராமரிக்கும் பொறுப்பையும் மாணவ, மாணவியரிடம் ஒப்படைத்தனர். இங்கு இயற்கை வழி விளைவிக்கப்பட்ட பலரக காய்கறி, ஆண்டுதோறும் இரண்டு டன் வரை உற்பத்தி செய்யப்பட்டது.
இவை, இங்கு படிக்கும் விவசாயத்துறை மாணவ, மாணவியருக்கும் உதவியாக இருந்தது.இது தவிர, உற்பத்தி செய்யப்பட்ட காய்கறி விதைகளை, மாடித்தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு, இலவசமாக வழங்குகிறார்கள்.பல்வேறு இடங்களில் நடக்கும் விதை திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று, தரமான விதைகளை வாங்கி வந்து, பள்ளி வளாகத்தில் விதை நடவு செய்கிறார்கள்.
தற்போது நோய் தொற்று காலம் என்பதால், பள்ளி வளாகத்தில் மைதானத்தின் ஒரு பகுதியை விவசாய செய்யும் பகுதியாக பள்ளி நிர்வாகம் மாற்றியுள்ளது.ஆசிரியர்களுக்கு இப்படியும் உதவிபள்ளிதாளாளர் அரவிந்தன், முதல்வர் பாஸ்கரன் கூறியதாவது:நோய் தொற்று காலம் என்பதால், மாணவ, மாணவியர் பள்ளிக்கு வருவதில்லை. இதனால் ஆசிரியர்களுக்கு முழுமையாக சம்பளம் வழங்க முடியாத, இக்கட்டான நிலை உருவானது.
எங்கள் பள்ளியில் பணியாற்றும், பெரும்பாலான ஆசிரியர்கள் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, பலர் தோட்ட வேலை செய்வதாகவும், ஆடு மேய்ப்பதாகவும் தெரிவித்தனர்.அந்த வேலையை பள்ளி வளாகத்தில், செய்ய வைத்து விளையும் காய்கறிகளை அவர்களுக்கே கொடுத்து, பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காண்கிறோம்.
இதனால் பள்ளி மைதானத்தின், மேலும் ஒரு பகுதியை நன்கு பண்படுத்தி நிலக்கடலை மற்றும் பள்ளி காம்பவுண்ட் சுவரையொட்டியுள்ள பகுதிகளில் மஞ்சளும், ஊடுபயிராக வெங்காயமும் பயிரிட்டோம். இப்பணியை பள்ளி ஆசிரியர்களே செய்தனர்.காலையில் ஆன்லைன் வகுப்பு, மாலை விவசாயம் என ஆசிரியர்கள் உற்சாகமாக உள்ளனர். பள்ளி வளாகம், தற்போது, விவசாய பூமியாக மாறி இருப்பது, நோய் தொற்று காலத்திலும் மனதில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
எங்கள் பள்ளியில் பணியாற்றும், பெரும்பாலான ஆசிரியர்கள் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, பலர் தோட்ட வேலை செய்வதாகவும், ஆடு மேய்ப்பதாகவும் தெரிவித்தனர். அந்த வேலையை பள்ளி வளாகத்தில், செய்ய வைத்து விளையும் காய்கறிகளை அவர்களுக்கே கொடுத்து, பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காண்கிறோம்.பள்ளி வளாகம் அருகே மஞ்சள் மற்றும் ஊடுபயிராக வெங்காயம் ஆகியன பயிரிடப்பட்டுள்ளன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups