ஆசிரியர்களுக்கும் காலாண்டு விடுமுறை; வலுக்கும் எதிர்பார்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 20, 2020

Comments:0

ஆசிரியர்களுக்கும் காலாண்டு விடுமுறை; வலுக்கும் எதிர்பார்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காலாண்டு விடுமுறை, ஆசிரியர்களுக்கும் பொருந்துமா என, கேள்வி எழுப்பி, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத சூழலில், மாணவர் சேர்க்கை மட்டும் நடக்கிறது. அனைத்து ஆசிரியர்களும், பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டுமென உத்தரவிடப்பட்டது.வீடியோ கன்டென்ட் தயாரித்தல், பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல், அலுவலக பணிகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் மத்தியில், ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை காலாண்டு விடுமுறை அறிவித்துள்ளது.வரும் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்பு நடத்த கூடாதென பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்றுநர்கள் இதை உறுதி செய்ய, பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.கற்பித்தல், நிர்வாக பணிகள் நடக்காததால், விடுமுறை அளிக்க வேண்டுமென, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews