சென்னை பல்கலையில் இன்று 'ஆன்லைன்' தேர்வு துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 21, 2020

Comments:0

சென்னை பல்கலையில் இன்று 'ஆன்லைன்' தேர்வு துவக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக உயர்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ள, 'ஆன்லைன்' மற்றும் நேரடி எழுத்து தேர்வு, சென்னை பல்கலையில், இன்று துவங்க உள்ளது.
ஊரடங்கால், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் மாணவர்களுக்கு, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அரியர் உட்பட அனைத்து மாணவர்களுக்கும், 'ஆல்பாஸ்' வழங்கப்பட்டு உள்ளது.கடந்த, 2019 - 20ம் கல்வி ஆண்டில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும், கடைசி செமஸ்டர் தேர்வு நடத்தப்படுகிறது. அரசின் இந்த உத்தரவை, அண்ணா பல்கலை ஏற்கவில்லை.அனைத்து ஆண்டுகளுக்குமான கடைசி செமஸ்டர் தேர்வு, அரியர் மாணவர்களுக்கும் சேர்த்து, ஆன்லைன் தேர்வாக நடத்துகிறது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கு போட்டியாக, மற்ற கலை, அறிவியல் கல்லுாரிகளின் இணைப்புகள் உள்ள பல்கலைகளுக்கும், ஆன்லைன் தேர்வை உயர்கல்வித் துறை வழிகாட்டிஉள்ளது.ஆன்லைன் மற்றும் நேரடி எழுத்து முறையில், இந்த தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை முதலில் சென்னை பல்கலையும், அடுத்து, திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், தமிழக ஆசிரியர் பல்கலை, பெரியார், மனோன்மணியம் சுந்தரனார் உள்ளிட்ட பல்கலைகள் அறிவித்துஉள்ளன.
மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுத வகை செய்யும் இந்த தேர்வுக்கு, வினாத்தாள் மட்டும் இணையதளத்தில் அனுப்பப்படுகிறது. விடைத்தாள்களை இணையதளத்தில் பதிவேற்றியோ, விரைவு தபால் வழியிலோ மாணவர்கள் அனுப்பலாம்.ஏற்கனவே, திருவள்ளுவர் பல்கலையில் தேர்வு துவங்கிய நிலையில், சென்னை பல்கலையில் பெரும்பாலான பாடப் பிரிவுகளுக்கு, இன்று தேர்வு துவங்குகிறது. தேர்வை முறைகேடுகள் இல்லாமல் எழுத, மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews