NMMS - உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் உதவித்தொகை (NMMS) - திட்ட ஆண்டு 2020-2021 - தேர்ச்சி பெற்ற & முன்னர் தேர்ச்சி பெற்று பயிலும் மாணவியரின் விவரங்களை இணையதளத்தில் விண்ணப்பித்து மற்றும் புதுப்பித்து பதிவேற்றம் செய்தல் - கூடுதல் தகவல் தெரிவித்தல் - தொடர்பாக National Income and Skills Scholarship (NMMS) - Project Year 2020-2021 - Uploading and updating the details of the graduate & pre-graduate student on the website - Upgrading - Contact - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 21, 2020

Comments:0

NMMS - உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் உதவித்தொகை (NMMS) - திட்ட ஆண்டு 2020-2021 - தேர்ச்சி பெற்ற & முன்னர் தேர்ச்சி பெற்று பயிலும் மாணவியரின் விவரங்களை இணையதளத்தில் விண்ணப்பித்து மற்றும் புதுப்பித்து பதிவேற்றம் செய்தல் - கூடுதல் தகவல் தெரிவித்தல் - தொடர்பாக National Income and Skills Scholarship (NMMS) - Project Year 2020-2021 - Uploading and updating the details of the graduate & pre-graduate student on the website - Upgrading - Contact

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொருள்:
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் உதவித்தொகை (NMMS) - திட்ட ஆண்டு 2020-2021 - தேர்ச்சி பெற்ற & முன்னர் தேர்ச்சி பெற்று பயிலும் மாணவியரின் விவரங்களை இணையதளத்தில் விண்ணப்பித்து மற்றும் புதுப்பித்து பதிவேற்றம் செய்தல் - கூடுதல் தகவல் தெரிவித்தல் - தொடர்பாக

1 தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நக.எண். 048620/எம் இ4/2019 நாள். 25-08-2020
2 இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம் நாள்.29.08.20208 03.09.2020
தேசிய வருவாய் வழித்திறன் தேர்வில் (NMMSS) தேர்ச்சி பெற்று தற்போது 2019-20 ஆம் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கவும், 10ம், 1ம் மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் National Scholarship Portal இணையளத்தில் ஆன்லைனில் புதுப்பிக்கவும் கீழ்க்காணும் கூடுதல் வழிமுறைகளை பின்பற்றி செயல்பட அனைத்து வகை அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர்! மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ✓ NMMS கல்வி உதவித் தொகைக்கு மாணவர் அளவில் விண்ணப்பிக்க இறுதி நாள் 15.10.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
* மாணவரின் பெயர் கண்டிப்பாக NMMSS தேர்ச்சி பட்டியலில் உள்ளது போலவே இருத்தல் வேண்டும்.
V New Registration இல் Name of the Student என்ற கலத்தில் வேறுபாடு உடைய பெயரை வழங்கினால் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இயலாது. எனவே கட்டாயம் மாணவர் பெயர் NMMS தேர்ச்சி பட்டியல் அல்லது NMMS நுழைவுச்சீட்டில் உள்ளது போலவே இருத்தல் வேண்டும்.(Including dot and space)
* Identificatior details என்ற சுலத்தில் ஆதார் எண் (Aadhaar Number) வழங்கி விவரங்களை வழங்கி Submit செய்யவும். (மாணவரின் ஆதார் பெயர் மற்றும் NMMS தேர்ச்சி பட்டியலில் உள்ள பெயர் இரண்டும் ஒருபோலவே இருந்தால் மட்டும் இவ்வகையில் Identification வழங்குதல் வேண்டும்.
"Aadhaar Data does not match" என விவரம் பெறப்பட்டாலோ அல்லது மாணவரின் ஆதார் பெயர் மற்றும் NMMS தேர்ச்சி பட்டியலில் உள்ள பெயருடன் வேறுபாடுடன் இருந்தாலோ, Identification details என்ற கலத்தில் Bank A/c Number எனக்கொடுத்து வங்கி கணக்கு புத்தகத்தினை Scan செய்து Upload செய்து விண்ணப்பித்தல் வேண்டும். இவ்வகையிலான மாணவர்களுக்கு விண்ணப்பிக்கும் போது மாணவரின் Bonafide Certificate Scan செய்து upload செய்யவேண்டும்.
Present Class Start Date: 14/07/2020.
* மாணவர்களுக்கு கட்டாயம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலேயே (Nationalised Banks) கணக்கு துவக்கி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் வேண்டும். பல்லவன் கிராம வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் உள்ள வங்கி கணக்குகள் கட்டாயம் உதவித்தொகைக்கு பதிவேற்றம் செய்தல் கூடாது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லாத வேறு வங்கிகளில் மாணவர்களுக்கு விண்ணப்பித்தால், உதவித்தொகை கிடைக்கப்பெறாத சூழல் ஏற்படும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
உதவித்தொகை விண்ணப்பத்தின்போது மாணவர்களின் Bonafide Certificate --யை பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
Scholarship Category-- Pre-matric--yil. Scheme Type-e Scholarship Scheme என்றும் கொடுத்து பதிய வேண்டும். * மாணவர்களின் Account number விவரங்களில் சரியாக வழங்கி, விண்ணப்பிப்பதற்கு முன்னர் மீள சரிபார்த்து சமர்பித்தல் வேண்டும்.
வங்கி கணக்கு விவரங்கள் சமர்பித்த பின்னர் மீண்டும் மாற்றம் செய்ய இயலாது எனவும், பின்னர் கல்வி உதவித்தொகை பெறப்படாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வனைத்து பணிகளையும் 15, 10.2020-க்குள் முடித்திட அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews