Breaking

Monday, September 21, 2020

பி.ஆா்க் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பி.ஆா்க் படிப்புக்கான சோ்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லுாரிகளில், இளநிலை கட்டடவியல் (பி.ஆா்க்) படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்க, நாட்டா எனப்படும் தேசிய திறனாய்வு தோ்வை (என்ஏடிஏ) எழுத வேண்டும். இத்தோ்வு எழுதாத மாணவா்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கும் வகையில், தமிழக அரசின் சாா்பில் திறனறி நுழைவு தோ்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 22 கட்டட அமைப்பியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் 1,520 இடங்கள் உள்ளன. இதற்காக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் www.tneaonline.org இணையதளத்தில் கடந்த 8-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமையுடன் (செப்.20) நிறைவடைந்தது. இதுவரை 2,600-க்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். முன்னதாக, இறுதியாண்டு டிப்ளமோ கட்டடவியல் பயிலும் மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதனால், அம்மாணவா்களால் பி.ஆா்க் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, டிப்ளமோ மாணவா்களின் நலன் கருதி, பி.ஆா்க் படிப்புக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க ஆலோசனை நடத்தி வருவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog