அரியர் தேர்வு ரத்து என்பது நிர்வாக வசதிக்காக எடுத்த முடிவு: அ.கருணாநந்தன், ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 14, 2020

அரியர் தேர்வு ரத்து என்பது நிர்வாக வசதிக்காக எடுத்த முடிவு: அ.கருணாநந்தன், ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஒரு மாநில அரசு அதீதமான சூழ்நிலையில் எந்த முடிவு எடுப்பதற்கும் உரிமை இருக்கிறது. அதை நாம் மறுக்கவில்லை. ஆனால், அரசின் முடிவில் சில செயல்முறைகள் இருக்கிறது. அதை பின்பற்றி செய்திருக்க வேண்டும். இறுதி ஆண்டு தேர்வை மாணவர்கள் எழுதுகிறார்கள். இடைப்பட்ட காலத்தில் உள்ள அனைத்து அரியர் தேர்வையும் ரத்து செய்வதாக கூறுகிறார்கள். இவ்வாறு செய்யும்போது, பொதுவாக அதன் தாக்கம் கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், வேலைகொடுப்பவர்களிடத்தில் நல்ல கருத்தை உருவாக்காது. எனவே, அரியர் தேர்வை எளிமையாக்கியிருக்கலாம். அதாவது ஆன்லைன் முறையில் தேர்வு, குறைந்தபட்ச தேர்வு போன்ற முறையில் எளிமையாக்கியிருக்கலாம். இதை விவாதிப்பது கல்வியாளர்கள் கூட்டம் தான். உயர்கல்வி கூட்டமைப்பு என்ற ஒன்று நம்மிடம் ஏற்கனவே உள்ளது. பல்கலை உறுப்பினர்கள் அதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அதுபோன்ற அமைப்புகளை பயன்படுத்தி, அவர்களிடமிருந்து அரசு கருத்தை வாங்கியிருக்க வேண்டும். அதன்பிறகு கல்வித்துறையாளர்களின் முடிவாக இருக்க வேண்டுமே தவிர நிர்வாக வசதிக்காக எடுக்கிற முடிவாக இருந்திருக்கக்கூடாது. ஆனால், அரசு தற்போது எடுத்துள்ள முடிவு நிர்வாக வசதிக்காக எடுத்த முடிவாக தெரிகிறது. இது ஒரு கல்வியுனுடைய பல்வேறு பரிணாமங்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாக தெரியவில்லை. அரியர்ஸ் வைத்த மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். 20 பேப்பர் அரியர் வாங்கிய மாணவனும், ஒன்று; இரண்டு பேப்பரில் அரியர் வாங்கிய மாணவனும் ஒன்றாக கருதப்படுகிறார்கள். இது மதிப்பீடு செய்யும் முறையில் தவறு ஏற்படுவதாக நினைக்கிறேன். தமிழ்நாடு உயர்கல்விக்குழு என்ற ஒன்று உள்ளது. இதில், உயர்கல்வித்துறை அமைச்சரும் தலைமை பொறுப்பில் இருக்கிறார். இங்கு கலந்து ஆலோசித்த பிறகு முடிவு எடுத்திருக்கலாம். ஒரு அறிக்கையில் அரியர் தேர்வு ரத்து என்று அறிவித்துள்ளதால், மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை செலுத்தி படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை பாதிக்கும். நம் தரம் குறித்து அடுத்தவர்கள் பேசும் அளவிற்கு வழிவகுத்துவிடக்கூடாது. மாணவர்கள் வாங்கிய பட்டத்தில் விமர்சனம் வந்து விடக்கூடாது. நாளைக்கு அதில் பின்விளைவுகள் ஏற்படும். இது அவசரகோலத்தில் எடுக்கப்பட்ட முடிவாக தெரிகிறது. அனைத்துக்கட்சிகளையும் அழைத்து பேசியிருக்க வேண்டும். பேசமுடியாத விஷயம் கிடையாது. ஏன் என்றால் இது ஒரு நாட்டினுடைய பிரச்சனை என்று வந்துவிட்டால், கட்சி பிரச்னையாக மாற்றிவிடக்கூடாது. இப்போது ஆளும்கட்சி ஒருதலைபட்சமாக முடிவு எடுக்கிறது என்ற நிலையாகிவிட்டது. இதை ஒருமாநில பிரச்னையாக அரசு மாற்றியிருக்க வேண்டும். கட்சியை கடந்து சில முடிவுகளை எடுக்க வேண்டும். இதில் இவ்வாறு முடிவு எடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் மற்றவர்களுடன் விவாதிப்பதற்கே இவர்கள் தயங்குகிறார்கள். பாதுகாப்பு நடவடிக்கைகள், சமூகத்தில் நடக்கவேண்டிய மற்ற நடவடிக்கைகள் குறித்து மக்களிடத்தில் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். அப்போது தான் ஆதரவு கிடைக்கும். இது மாநிலத்தின் முடிவாக இருந்திருக்க வேண்டும். முதல்வரின் முடிவாக வந்திருக்கக்கூடாது என்பது எனது கருத்து. மாணவர்கள் பல இடங்களில் உயர்கல்விக்கு, ஆய்வுக்கு செல்லும் ேபாது வெளியில் நியாயப்படுத்த முடியாத நடவடிக்கைகள் இருந்தால் எதிர்காலம் பாதிக்கப்படும். இன்ஜினியரிங் தேர்வுகளை ஆன்லைனிலேயே நடத்திவிட முடியும். ஏதாவது ஒருமுறையில் மாணவர்களின் தரத்தினை பரிசோதனை செய்துவிட்டார்கள் என்பதற்கு ஆவணம் வேண்டும். அந்த ஆவணம் தற்போது இல்லையே. இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கும் இந்த அரசுதான் பொறுப்பேற்க வேண்டிய நிலை வரும். தேர்வு முறையை எளிமைப்படுத்துவது குறித்து கல்வியாளர்கள், கல்வி அமைப்புகளிடத்தில் பேசி முடிவு எடுத்திருக்கலாம். ஏதாவது ஒருமுறையில் மாணவர்களின் தரத்தினை பரிசோதனை செய்துவிட்டார்கள் என்பதற்கு ஆவணம் வேண்டும். இதனால் ஏற்படும் பாதிப்புக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். * தொழில்நிறுவனங்களுக்கு திறன் மேம்பாடு மட்டுமே தேவை: அன்சர் பாஷா, தனியார் வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு ஒரு தொழில் நிறுவனம் ஆட்கள் தேவை குறித்த விவரங்களை தரும் போது அதில் குறிப்பிட்ட பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை முடித்திருக்க வேண்டும் என்று கேட்கும். நேரடித்தேர்வில் நிறுவனத்துக்கு தேவையான தகுதிகள் சம்பந்தப்பட்ட நபரிடம் இருக்க வேண்டும். குறிப்பாக, ஆங்கிலம் மற்றும் தமிழ் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். முக்கியமாக மாணவர்களின் திறன்மேம்பாடு குறித்து வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனம் பரிசோதிக்கும். ஒரு நிறுவனம் நடத்தும் நேர்முகத்தேர்வில் உள்ள 3 படிநிலைகளை மாணவர்கள் சிறப்பாக முடித்தால் தான் அவர்களை நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கும். இதில், அரியர் உள்ளவரா, இல்லாதவர்களா என்பது குறித்து நிறுவனங்கள் கேட்பதில்லை. மாணவர்கள் நிறுவனத்துக்கு தேவையானவற்றை தெரிந்திருந்தாலே போதும். நிறுவனம் சார்ந்த பணிகளில் சிறந்து விளங்கினாலே போதும். ஒரு மாணவர் கல்லூரியில் அரியர் வைத்திருந்து அவர் திறன் மேம்பாட்டில் சிறந்தவராக இருந்தால் கண்டிப்பாக அவரையே நிறுவனம் வேலைக்கு எடுக்கும். உள்நாடு மற்றும் வெளிநாடு என எந்த பெரு நிறுவனங்களாக இருந்தாலும் அவை மாணவர்களின் திறன் மேம்பாட்டை வைத்தே அவர்களை வேலைக்கு எடுக்கும். குறிப்பாக, நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுக்கும் போது மாணவர்கள் பதற்றம் இல்லாமல் அடிப்படை அறிவை பெற்றிருந்தால் போதும். இதுவே, மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரும். சிலருக்கு படிப்பறிவு இருக்காது. தொழில்நுட்ப ரீதியாக வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள். இதுபோன்ற நபர்களையே நிறுவனங்கள் அதிகம் தேடும். மார்க்கெட்டிங் போன்ற படிப்புகளில் விற்பனையே முக்கியம். அதுசார்ந்த அறிவு பெற்றால் போதும். இதேபோல், நிர்வாக ரீதியான படிப்புகளுக்கு அது சம்பந்தப்பட்ட அறிவும், கணினி அறிவும் பெற்றிருந்தால் போதும். எந்த வேலைக்கு பதிவு செய்கிறோமோ அது சார்ந்த முன் அனுபவம் இருக்கிறதா என்று கேட்கப்படும். இவற்றை ஆராய்ந்தே ஒரு மாணவர் வேலைக்கு தகுதியுடையவரா, தகுதி அற்றவரா என்று கணிக்க முடியும். அரியர் என்பது தேவையற்றது. எந்த ஒரு நிறுவனமும் அரியர் இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபர் சிறந்து செயல்படகூடியவரா என்பதையே எதிர்பார்க்கும். ஒரு நபரை வேலைக்கு எடுத்தால் அவரால் நிறுவனத்திற்கு லாபம் இருக்குமா, இல்லையா என்பதையே எதிர்பார்ப்பார்கள். நிறுவனத்தை முன்னேற்றி செல்பவர்களையே நிறுவனங்கள் பெரும்பாலும் வேலைக்கு எடுக்கும். டிகிரி முடித்த பெரும்பாலான நபர்களால் நேர்முகத்தேர்வை சரியாக எதிர்கொள்ள முடிவதில்லை. அவர்களால் கலந்துரையாட முடிவதில்லை. நேருக்கு நேர் பேச முடிவதில்லை. தன்னம்பிக்கை இருப்பதில்லை. இதுபோன்ற நபர்களை நிறுவனங்கள் வேலைக்கு எடுக்காது. நாங்கள் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது கூட இதுபோன்ற பிரச்னைகள் நிறைய மாணவர்களிடம் இருப்பதை காண முடிகிறது.
ஆனால், அரியர் உள்ள மாணவர்கள் திறமையை முன்னிறுத்தி தன்னம்பிக்கையுடன் நேர்முகத்தேர்வை எதிர்கொள்கிறார்கள். இதன்மூலம், அரியர் உள்ள மாணவர்கள் வேலைக்கு தேர்வாகிறார்கள். 90 சதவீத நிறுவனங்கள் திறன் மேம்பாடு உடைய மாணவர்களையே வேலைக்கு எடுக்கும். அரியர் என்பதால் எந்த பாதகமும் இல்லை. இதேபோல், ஒருவர் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து பணியில் இருந்தால் மட்டுமே அடுத்தகட்ட வேலைக்கு செல்ல முடியும். தொழில் நிறுவனங்களும் இதை முதன்மையாக கருதுகிறது. தங்களுக்கு கொடுக்கும் பணியை சிறப்பாக செய்து முடித்து நிறுவனத்திற்கு லாபம் ஈட்டித்தரும் நபர்களை உயர் பதவிகளிலும் கொண்டுசெல்வார்கள். படிப்பில் சிறப்பாக விளங்கி, நிறுவனம் சார்ந்த பணிகளில் எதுவும் தெரியாமல் இருந்தால் அது பயன் தராது. எந்த ஒரு நிறுவனமும் அரியர் இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபர் சிறந்து செயல்படக்கூடியவரா என்பதையே எதிர்பார்க்கும். நிறுவனத்தை முன்னேற்றி செல்பவர்களையே நிறுவனங்கள் பெரும்பாலும் வேலைக்கு எடுக்கும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews