மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தீக்ஷா (DIKSHA) - விரைவுக் துலங்கல் குறியீடு (QR Code) - பயன்பாட்டை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பரவலாக்குதல் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல் - சார்ந்து - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் - நாள். 21.09.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 23, 2020

Comments:0

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தீக்ஷா (DIKSHA) - விரைவுக் துலங்கல் குறியீடு (QR Code) - பயன்பாட்டை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பரவலாக்குதல் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல் - சார்ந்து - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் - நாள். 21.09.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-600 006. ந.க.எண். 258 /73 /2019, நாள். 21.09.2020 பொருள்: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தீக்ஷா (DIKSHA) - விரைவுக் துலங்கல் குறியீடு (QR Code) - பயன்பாட்டை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பரவலாக்குதல் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல் - சார்ந்து

***** தற்போதைய Covid-19 தொற்று பரவல் சூழ்நிலை காரண்மாக பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர இயலாத நிலை உள்ளது. இந்நிலையில் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தால் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான காணொலி பாடப்பொருள்கள் (Video Content) உருவாக்கப்பட்டு, அதனை விலையில்லா மடிக்கணினிகளில் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டு மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

ஒன்று முதல் பதினொன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காணொலி படப்பதிவுகள் உருவாக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒலி வடிவிலான பாடப் பொருட்கள் (Audio Content) உருவாக்கப்பட்டு வானொலி வாயிலாக ஒலிபரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாண்டிற்கான பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிலிருந்தே அவரவர் பாடத்திலுள்ள QR Code-ஐ (Scan) செய்து அதிலுள்ள காணொலியை கண்டும், கேட்டும், பாடக் கருத்துக்களை உள்வாங்கி புரிந்து கொள்ள ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது சார்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் பின்வருமாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1. மாவட்டத்திலுள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மூலம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு விவரத்தினை தெரிவித்து QR Code Scan செய்து பாடக் கருத்துக்களை பெறச் செய்தல் வேண்டும்.

2 மாவட்டக்கல்வி அலுவலர்கள் மூலம் தங்களது கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு/உதவிபெறும் / மெட்ரிக் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி அந்தந்தப் பள்ளி ஆசிரியர்கள் மூலம் அவர்களது வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்து QR Code Scan செய்து பாடக்கருத்துக்களை பெறச் செய்தல் வேண்டும்.
இவ்வாறாக மாணவர்கள் அதிக அளவில் பாடப்புத்தகங்களில் உள்ள QR Code னை Scan செய்து பயன்படுத்தும் நிலையில் DIKSHA இணையதளத்தில் நமது பயன்பாடு அதிகரிக்க இயலும். எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடன் இதற்கான முனைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு, இணைப்பில் கண்டுள்ள விவரங்களை சுற்றறிக்கை மூலமாக தெரிவித்திடவும் இது குறித்த விவரத்தினை 30.09.2020-க்குள் மின்னஞ்சல் வாயிலாக இந்நிறுவன tnscert2@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இயக்குநர்
பெறுநர்
1. அனைத்து மாவட்ட கல்வி முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
2. அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
3. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
4. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் (மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக) நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews